புத்தளத்தானே / புத்தளச்சியே…
அடிக்கடி கேட்கும் வார்த்தைகள் “ம்மாவிற்கு இருக்கும் ஆரோக்கியம் கூட எனக்கில்லை”. சுத்தமான உணவு, சுத்தமான காற்று அவர்களுக்கு கொடுத்த ஆரோக்கியம் எமக்கில்லை.
இந்த நிலையில் எமது அடுத்த சந்ததியில் இருந்து நாம் எதிர்பார்ப்பது என்ன? நச்சு காய்கறி, பழங்கள், மீன் , இறைச்சி… எல்லாமே எம்மை புதைக்குழிக்கு கொண்டு செல்ல ஆங்காரமாய் காத்திருக்கும் போது காற்று நஞ்செனும் சிவப்பு கொடியேற்ற தாயாராகும் நொடியில் குடிக்கும் நீருக்கும் நஞ்சு கலக்க வழிசமைக்க காத்திருக்கும் குப்பை.
சீமெந்து காற்றை சூறையாட, அனல் மின் காய்கறிகளை நஞ்சாக்க, மீன்களில் இரசத்தை சேமித்திருக்க, புற்றுநோய்க்கு செங்கம்பளம் ஏற்கனவே போடப்பட்ட நிலையில் மிஞ்சிருக்கும் கொஞ்சநஞ்ச நலவுக்கும் காலானாகும் குப்பை.
இரவு, பகலாய் ஓடுகின்றார்கள் எம் சகோதர, சகோதரிகள்.. ஊருக்கென தம்மாலான முழு பங்களிப்பையும் செலுத்தி, எம் உரிமைக்குரல் ஒடுக்கப்படாமல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென.
உங்கள்,எங்கள் சந்ததி நிம்மதியாய் வாழ இவ்வுப்பு தளம் பொறுத்தமில்லை எனின், என்ன உழைத்து, என்ன சேமித்து, சொத்து சேர்த்து என்ன பலன்? அனுபவிக்க யாரை எம் பெயர் சொல்ல விட்டுவிட்டு செல்லப்போகின்றோம்?
நாம் வேண்டுவதெல்லாம் ஒன்று தான்… முடிந்தவர்கள் இரவு, பகலாய் ஓடுகின்றோம். அவ்வப்போது உங்கள் ஆதரவு தேடி உதவிக்கரம் நீட்டுகின்றோம். அப்போது கைக்கொடுக்க நம் சமூகமே முன்வரா விட்டால் நாம் யாரிடம் செல்வோம்?
அரசே திரும்பிப்பார் என கூக்குரல் இட, நீங்களும் எம்முடன் இல்லா விட்டால் எம் சந்ததி கருகி விடாதா?
நட்பு என்ற வகையில் உரிமையாய் வேண்டுகிறோம் முடிந்தவரை இதை பகிருங்கள், எம் முயற்சி எம் மண் உறிந்துக்கொள்ள உதவி செய்யுங்கள்,
எம் நிலம் காத்திட ஒன்றிணையுங்கள்.
இது எம்முடையதும் உங்களுடையதுமான அழைப்பாய் இருக்கட்டும்.
உரிமை எடுங்கள்,சேர்ந்து செய்வோம், சேர்ந்து வெல்வோம்.
இன்று உங்கள் அனைவரையும் எதிர்பார்த்தவர்களாய்…
#CleanPuttalam