Puttalam Online
regional-news

ஸாஹிராவில் புத்தளம் மாவட்ட பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடல்

  • 25 December 2018
  • 894 views

புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் சங்கக் கூட்டம் நேற்று சாஹிரா தேசிய பாடசாலை- காதர் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் புத்தளம், கற்பிட்டி, மதுரங்குளி, திகழி உட்பட புத்தளம் பிரதேச எல்லைக்குட்பட்ட தமிழ் பேசும் மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

நிகழ்வின் விஷேட அதிதிகளாக புத்தளம் நகரபிதா K.A.பாயிஸ் உட்பட புத்தளம் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் Z.A.ஸன்ஹிர், புத்தளம் பெரியபள்ளி நிர்வாகத்தின் செயலாளர் ஜனாப்.நாஸிக், பௌத்த கற்கைககளில் முதுமானிப்பட்டம் பெற்ற அஷ்ஷெய்க்.ஆஸாத் சிராஸ் (நளீமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான பேராதனை பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஹனான் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து புத்தளம் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் Z.A.ஸன்ஹிர் அவர்கள், புத்தளத்தின் இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தின் (YMGA) தோற்றம், வளர்ச்சி, அடைவுகள் என சுவாரஷ்யமான அனுபவப் பகிர்வொன்றை மேற்கொண்டார். தொடர்ந்து உரையாற்றிய அஷ்ஷெய்க். ஆஸாத் சிராஸ் (நளீமி) பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

புத்தளம் நகரபிதா K.A.பாயிஸ் அவர்கள் அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்கக்கூடிய பங்கினை விபரித்துச் சென்றார்.

நிகழ்வின் இரண்டாம் கட்ட அமர்வில் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் குறிக்கோள், நோக்கு, எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் சங்கத்திற்கான யாப்பை வடிவமைப்பதை முன்வைத்து தற்காலிக செயற்குழு அமைக்கப்பட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இனிவரும் காலங்களில் புத்தளம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்திடமிருந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All