Puttalam Online
other-news

சமாதான சகவாழ்வின் சரித்திர நாயகன் – அஷ்  ஷெய்க் ஸதகதுல்லாஹ்

  • 27 December 2018
  • 168 views

(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

கண்டி திகன வன்முறைகளின் பொழுது தாக்கப்பட்டு நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இலங்கையின் மூத்த இஸ்லாமிய அறிஞர் அஷ் ஷெய்க் ஸதகதுல்லாஹ் நத்வி நேற்று இரவு (26/12/2018) வபாஃத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…!

கண்டி, தெல்தொட்டைய பிறப்பிடமாகக் கொண்ட ஸதகதுல்லாஹ் ஹஸரத் நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது அதே ஊரை பிறப்பிடமாகக் கொண்ட எமது தாயாரின் தூரத்து உறவுக்காரர் என அறிமுகமாகியவர்.

பின்னர், முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்த பொழுது அதன் உயர் பீட உறுப்பினர் தெல்தோட்டை இல்யாஸ் மௌலவி அவர்களுடன் உலமா காங்கிரஸ் மாநாடுகளிற்கு வளவாளராக வருகை தருபவர்.

நானறிந்த வகையில் அந்தக் காலப் பிரிவில் தமிழ் மொழி மௌலவி ஆசிரியராக, கதீபாக பணி செய்த அவர் சிங்கள மொழியில் குத்பாக்களை கொழும்பு மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் நிகழ்த்தும் ஒரே ஒரு மார்க்க அறிஞராக அறிமுகமாகியிருந்தார்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மற்றும் தொலைக் காட்சிகளில் தமிழ் சிங்கள மொழிகளில் சன்மார்க்க விளக்க உரைகளை நிகழ்த்தும் சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் மத்திய குழு உறுப்பினரும், கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும் ஆவார்.

சமாதான சகவாழ்வு குறித்து பல தசாப்தங்களிற்கு முன்னரே கருத்தாடலை ஆரம்பித்த ஷேய்க் ஸதகதுல்லாஹ் ஹஸரத் அவர்களது வாழ்வும், பணியும், மரணமும் இந்த தேசத்து உலமாக்களுக்கும் புத்திஜீவிகளிற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பல செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் வாழ்வையும் பணியையும் நல அமல்களையும் அங்கீகரித்து பிழைகளை பொறுத்து உயரிய சுவன வாழ்வை வழங்குவானாக!

பிரிவால் துயருற்றிருக்கும் அன்பின் மனைவி மக்கள் உற்றார் உறவினர் உடன் பிறப்புக்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன அமைதியை வழங்குவானாக!

குறிப்பு : “சமாதான சகவாழ்விற்கான ஷேய்க் ஸதகதுல்லாஹ் நிதியம்” ஒன்றை ஆரம்பிப்பது அவரது வாழ்வையும் பணியையும் கௌரவிப்பதாகவும், அவருக்காண சதகதுல் ஜாரியாவாகவும் அமையும் என்பதனை கண்டி மாவட்ட ஷூரா சபை மற்றும் இளம் நண்பர்கள் அமைப்பு, CMIC, கண்டி நகர ஜம்மியாய்துல் உலமா ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்!

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All