Puttalam Online
current

புத்தளம் பஸ் தரிப்பிட கட்டண பிரச்சினை சமரசத்தில் நிறைவு

  • 3 January 2019
  • 275 views

புத்தளம் பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன் தினம் முதல் இடம்பெற்று வந்த பஸ் கட்டண அதிகரிப்பு பிரச்சினை முடிவுக்கு வந்தது. புத்தளம் நகர சபையினால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் அறவிடப்பட்டு வந்த 100/- ரூபா பஸ் நிலைய பஸ் தரிப்புக் கட்டணத்தை 2019 ஜனவரி 1 முதல் நாளொன்றுக்கு 150/- ரூபா அறவிடுவது என நகர சபை, சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வறிவித்தலை சென்ற மாதம் 26 அன்று அனைத்து பஸ் சாரதிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் எவரும் கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். ஆகவே, நகர சபை 2019 ஜனவரி ஒன்றான நேற்றைய முன்தினம் புதிய பஸ் தரிப்பிட கட்டணமான 150/- வை அறவிட எத்தனித்த போது அவர்கள் தர மறுப்புத் தெரிவித்தனர். எனவே, பஸ் வண்டிகள் அனைத்தையும் பஸ் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தும் முடிவை எடுக்க வேண்டிய தேவை நகர சபைக்கு ஏற்பட்டது.

இன்று காலை வரை தொடர்ந்த இப்பிரச்சினைக்கு தீர்வை எட்டும் நோக்கில், பஸ் சாரதிகள் ஒன்றிணைந்து இன்று புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடல் புத்தளம் பஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, உப நகர பிதா ஆர்.ஏ.எஸ். புஷ்பகுமார உட்பட நகர சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சுமுகமாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பஸ் சாரதிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்க 150/- ரூபாவிலிருந்து 20/- ரூபாவைக் குறைத்து நாளொன்றுக்கு 130/- ரூபா அறவிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு, வருடா வருடம் 10% வீத அதிகரிப்பை செய்வது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு முதல் இதுவரை அந்த அதிகரிப்பை நகர சபை செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All