Puttalam Online
regional-news

Zahirians13 அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நிறைவு

  • 5 January 2019
  • 175 views

Z13 Batch இன் வருடாந்த அங்கத்துவர் பொதுக்கூட்டம் அண்மையில் இரவு 8:30PM முதல் 11:00PM வரை I-Soft கல்லூரி கேட்போர் கூடத்தில் 2018ம் ஆண்டின் செயலாளர் Amjath Khan இன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக அறிமுக உரை சகோ. Amjath khan அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு, கிராத் சகோ. A.H.M.Amjad இனால் ஓதி, ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்பு தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதம் முறையே இசைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தலைமை உரை 2018ம் ஆண்டின் தலைவர் Ala Mohamed அவர்களின் மூலம் ஆற்றப்பட்டது. அதில், Z13 Batch இன் நோக்கம் எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள், செயல்திட்டங்கள் என்பன பற்றி அலசிச் சென்றார்.

பின்பு சென்ற வருட பொதுக்கூட்ட அறிக்கை-(Annual Report) ஆவணம் வாயிலாகவும்;
செயற்திட்ட அறிக்கை-(Project Report) Presentation ஊடாகவும் சமர்ப்பிக்கப்பட்டன.
பின்பு சுவையில் ஒரு மாற்றத்திற்காக ஒரு பாடலினை சகோ. Zain Islam வழங்கிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து நிதியறிக்கை-(Finance Report) சகோ. Ala Mohamed இன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டு, Batch இன் அங்கத்தவர்களுக்கு இடையே திறந்த கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது.

பின்பு Z13 Batch இன் ‘யாப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வாக வாக்கெடுப்பு இடம் பெற்று, புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க,

★தலைவர்: H.H.M.Hamas
★உப தலைவர்: A.L.Althaf
★செயலாளர்: S.S.M.Sareek
★உப செயலாளர்: A.H.M.Amjad
★பொருளாளர்: A.W.M.Sarafath
★உப பொருளாளர்: A.N.M.Akmal
★ஒருங்கிணைப்பாளர்: M.A.Amjath khan
★உப ஒருங்கிணைப்பாளர்: A.B.M.Hasni
★ஊடக பொறுப்பாளர்: M.Maazin

இறுதியாக இனிய சிற்றுண்டி பரிமாறல் மற்றும் துஆ பிரார்த்தனையுடன் இக்கூட்டமானது இனிதே நிறைவு பெற்றது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All