Puttalam Online
regional-news

கத்தார் இலங்கை கொமினிட்டி அணியில் புத்தளம் சாஹிரா வீரர்கள் இணைவு

  • 10 January 2019
  • 586 views

(எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்)

கத்தார் இலங்கை கொமினிட்டி உதைபந்தாட்ட அணிக்கு புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களான முஸ்தகீம், ஹம்தியாஸ் ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டனர்.

கத்தார் வாழ் இலங்கை சமூத்தினர் மத்தியில் தொடராக நடைபெற்றுவரும் உதைபந்தாட்ட தொடர்களில் தமது திறமைகளை நிருபித்து நட்சத்திரங்களாக பிரகாசித்தமையினாலேயே இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஆசியன் கொமுனிட்டி உதைபந்தாட்ட தொடரின் முதல் போட்டி இந்தோனேசியா அணிக்கு எதிராக நாளை (11-01-2019) தோஹா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள் இருவரும் இலங்கை கொமுனிட்டி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All