(சாமஸ்ரீ- க.மகாதேவன்-உடப்பூர்)
பொங்கல் அழைப்பு
தெள்ளு தமிழ் நாட்டீர் ! தேடரிய பெருஞ்செல்வம்
அள்ளும் தைத்திருநாள் அடுத்ததிது காணீரோ!
கள்ளப் புலக்கற்கள் கசடுபல நிறைந்திட்ட
உள்ளப் புலந்தன்னை உழுதிட்டான் குருதேவன்
————
ஞானக் கலப்பை கொடு உழுதிட்ட பெருநிலத்தே
ஊனக் கண்கான உருவெடுத்த உழத்தியெம(து)
ஈனக் கருவொழிக்கும் எம்மன்னை சாரதையும்
வானப் பெருங்கருணை விதையொன்று வழங்கிட்டான்
————-
யாகப் பெருமுனிவர்க்(கு)எட்டாத பேரின்பப்
போகப் பயிர் தோன்றிப் பொங்கும் கதிரமுதை
தியாகப் பெருவீரன் விவேக ஆனந்தன்
தாகம் தனிவிக்கத் தருகின்றான் வாரீரோ!
WAK