Puttalam Online
regional-news

விம்பிள்டன் உதைப்பந்தாட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி

  • 14 January 2019
  • 148 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால் புத்தளம் நகரில் நடாத்தப்பட்டு வரும் ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில், இரண்டாவது அரை இறுதி போட்டியில் புத்தளம் நகரின் மற்றுமொரு பிரபல அணியான விம்பிள்டன் அணி வெற்றி பெற்றுள்ளது.
.
புத்தளம் நகரின் பிரபல அணியான நியூ ஸ்டார்ஸ் அணியினையே  01 : 00 கோல்களினால் விம்பிள்டன் அணி வெற்றி கொண்டுள்ளது.
.
விம்பிள்டன் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடருக்காக புத்தளம் கால்பந்தாட்ட லீக் உருவாக்கியுள்ள சட்ட விதிகளின் பிரகாரம் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் ஏற்கனவே முதலாவது அரை இறுதி போட்டியில் தோல்வியடைந்துள்ள லிவர்பூல் அணியுடன் அடுத்து வரும் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.
.
இந்த இரண்டாம் கட்ட அரை இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணியே ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள புத்தளம் யாழ் முஸ்லிம் யுனைடெட் அணியுடன் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளது.
.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் அணிகளில் சம பலத்தை வகிக்கின்ற விம்பிள்டன், நியூ ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த ஆட்டமானது சனிக்கிழமை (12) மாலை புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
.
குறித்த இந்த போட்டியில் நியூ ஸ்டார்ஸ் அணி தோல்வியினை தழுவினாலும், ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நான்காம் இடத்தினை தக்க வைத்துள்ளது.
.
இன்னும் இரண்டு போட்டிகளே மிகுதி இருக்கின்ற நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக புத்தளத்தில் தொடராக நடாத்தப்பட்டு வந்த ட்ரகன்ஸ் வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் அடுத்த வாரம் நிறைவுக்கு வர உள்ளது.
.
மேற்குறித்த போட்டிக்கு பிரதம நடுவராக எம்.எஸ்.எம். ஜிப்ரியும் துணை நடுவர்களாக ஏ.ஓ.எம்.அஸாம், எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ. கியாஸ் ஆகியோரும் கடமையாற்றினர்.
.
இந்த போட்டி தொடரானது முதல் சுற்று புள்ளிகள் அடிப்படையிலும் இரண்டாம் சுற்று விலகல் முறையிலும் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
.
குறிப்பு :
விம்பிள்டன் அணி கருப்பு  நிற அங்கி.
நியூ ஸ்டார்ஸ் அணி சிவப்பு வெள்ளை நிற அங்கி
.
WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All