Puttalam Online
regional-news

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

  • 23 January 2019
  • 134 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுளம்பு வலைகளும், உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்ட காரியாலயத்தை மையமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், பிரான்ஸ் நாட்டின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவன அனுசரணையோடு இந்த உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த வருட இறுதியில் கிண்ணியா பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 600 குடும்பத்தினருக்கு நுளம்பு வலைகளும் 450 குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம். மிஹ்லார் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் எம்.இல்முதீன் உள்ளிட்ட பிரதேச பொலிஸ் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All