Puttalam Online
regional-news

புத்தளத்தில் இலங்கையின் 71 வது சுதந்திர தின வைபவ முன்னேற்பாடு

  • 23 January 2019
  • 216 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை புத்தளம் மாவட்ட செயலகம் மிகவும் சிறப்பான முறையில் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வுகள் பெப்ரவரி மாதம் 04ம் திகதி காலை புத்தளம் கொழும்பு முகத்திடலில் இந்த சுதந்திர தின வைபவம் இடம்பெறவுள்ளது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் நகர பிதா மற்றும் நகர பிரதேச சபை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச,அரச சார்பற்ற நிறுவனங்களின்அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் முப்படைகளின் வீரர்களுடைய அணிநடை வகுப்பும் இடம்பெறவுள்ளது. புத்தளம் மாவட்ட கலாச்சார மத்திய நிலைய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இருந்து காலை 06 மணிக்கு இந்த அணிநடை வகுப்பு ஆரம்பமாகி புத்தளம் கொழும்பு முகத்திடலில் நிறைவடைவதோடு அங்கு பிரதான வைபவமும் இடம்பெறவுள்ளது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All