(Newton Isaac)
பொழுது விடிந்ததிலிருந்து அன்றைய நாளின் சோலிகளை இனிதே முடித்துக் கொண்டு ஓய்வு பெறும் வரையில் எங்கெங்கெல்லாமோ போய் வருகிறோம். போகும் , வரும் வழிகள் பறவை பட்சிகள், விலங்குள் பிராணிகள், மனிதர்கள் என்று என்னென்னவோ வெல்லாமோ எம் பார்வைக்கு வருகின்ற. அவற்றின்மேல் விழுவது வெறும் வெற்றுப்பார்வைகள்தானே? நமது மனம் எங்கோ எதையோ பற்றி சிந்திக்கிறது. எனவே கண்ணில் படுபவைகளை கண்டோமா என்று கூட நினைக்கும் அளவுக்கு அவை பற்றிய சிந்தனையில்லாமல் கடந்து போய்விடுகிறோம். அதற்கெல்லாமா இந்த அவரச உலகத்திலே யாருக்கும் நேரம்?
இந்த முதியவர் – அதுதான் அந்தக் கால றூபி டெய்லர் – வளைய இடமில்லாமல் முகுது வளைந்து, கழுத்து வளைந்து கால்களும் கூட சற்ற வளைந்து கைத்தடியின் உதவியுடன் நடப்பது எனது கண்கணில் கூட இதுவரையில் விழுந்துதான் வந்திருக்கிறது. நேற்று மாலைவரையில் அவர்மீது அவ்வப்போது விழுவது வெற்றுப் பர்வையாகத்தான் இருந்தது. நேற்று மாலை மயங்கும் வேளையில் ரூபி டெய்லர் கைத் தடியைத் தட்டித் தட்டி , நத்தை போல ஊர்ந்து ஊர்ந்து எங்கு போகிறார் என்று பார்த்தபோதுதான் இவரைப் பற்றி இன்று எழுதினால் என்ன என்ற எண்ணம் என் மனத்திரையில் விழுந்தது.
முதுகும் வளைந்திருக்கிறது நிமிர முடியாது, கழுத்து வளைந்திருக்கிறது தலையைத் தூக்கிப் பாரக்க முடியாது, கண்களிரன்டும் பார்வை இழந்த கிடக்கிறன்றன. செவிப் பறைகள் வழியே எதும் உள்ளே செல்ல முடியாது. ஒட்டு மொத்தமாக ஓன்ரிரன்டைத் தவிர ஐம்புலன்களில் அவசியமான எல்லாமே செயலிழந்து நிற்கிறது. என்றாலும் என்ன உயிர் பிச்சை போட்டு , இ்ன்று வரையில் உண்டு குடித்து வாழ வைத்துள்ள இறைவனுக்கு நன்றி செல்லி சிரம் தாழ்த்தி வணங்க அவர் சிரமப்பட்டு வீட்டிலிருந்து புத்தளம் நகரத்தின் சாலிஹீன் பள்ளிவாசலுக்குப் போகிறார்.
நேற்றும்தான், இன்றும்தான். இன்ஷா அல்லாஹ் உயிர் உடலில் ஊசலாடும் வரையிலும் தான் இவரது பள்ளி வாசல் நோக்கிய நடை தொடர்கிறது. கொட்டும் பனி, சுட்டெரிக்கும் வெய்யில் என்பவைகளெல்லாம் ரூபி டெகய்லருக்கு ஒரு பொருட்டே இல்லை. சாலிகீன் பள்ளிக்குப் பகத்துக் கடைக்காரர்களனை விசாரித்துப் பார்தேன் அவர் ஐவேளை தொழுகைகளுக்காக பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்னமேயே பள்ளி வாசலுக்கு வந்து விடுவாராம்.
”அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்……” தூக்கத்தை விட தொழுமை சிறந்தது என்று அரபு மொழியில் விடுக்கப்படும் அழைப்பை் புரியாத முஸ்லிம்களும் இருக்க முடியுமா? புரிந்து கொண்டு போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு பலரும் தூங்கும்போது இந்த ரூமி டெய்லர் அதற்கு முன்னமே எழுந்து , தொழுகை தொடங்கு முன்னமே பள்ளிக்கு வருகிறார் என சொன் சாலிகீன் பள்ளிக்கப் பக்கத்துக் கடைக்காரர் தந்த இன்னுமொரு தகவல் எனக்கு ஆச்சரியத்தக்கு மேல் ஆச்சரியத்தைத் தந்தது.
முதுகு வளைவு இவரை நிமர முடியாத நிலையில் வைத்துள்ளது, கழுத்து வளைவு இவரை தலை தூக்க முடியாமற்ச் செய்துள்ளது, பார்வை இழுந்த கண்கள் தனக்கு முன்னால் யார் இருப்பது என்று கூட உணர முடிமாற் செய்துள்ளது. என்றாலும் அந்த வைகறைப் பொழுதில் பள்ளிவாசலின் தும்புத் தடி வைக்கப்படும் இடத்தை தேடி பிடித்து கூட்டித் துப்புரவு செய்கிறாரம். கண்கள் தெரியாதுதான். இருந்தும் என்ன கால்களால் அடி அடியாக உரசிப் பார்து எங்கெங்கு மண் கிடக்கிறது என்று அறிந்து கூட்டித் துப்புரவு செய்கிறாராம்.
தன்நம்பிக்கை இந்த மனிதரின் மிகப் பெரிய பிடிவாத குணமாக இருப்பதாகவும் எனக்கு தகவல் தந்த சகோதரர் சொன்னார். நடக்கும் போது கைத்தடியைத் தட்டித் தட்டி தனக்கு முன்னால் இருப்பது என்னவெற்று தெரிந்து கொள்வாராம். தப்பித் தவறி சற்று தடுமாறினாலும் யாராவது தனது கையைப் பிடித்து வழிகாட்ட முயல்வது இந்த மணுசனுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். ரூபி டெய்லரின் இந்த மனப்பாங்கு ஆச்சரியமாகக் கூட இருக்கிறது.
சின்னத் தலையிடி, காய்ச்சல் என்று வந்துவிட்டாலும் கூட பள்ளிசாலுக்குப் போகாமல் அந்த கடமையை தனிமையாக வீட்டில் செய்து கொள்ள முயல்வது பலருக்கும் போல எனக்கும்தான். இந்த ரூபி டெய்லரைப் பார்ததும் என்னையறியாமலேயே உள்ளுர ஒரு குற்ற உணர்வு நாடி நாளங்களில் ஓடி வெட்கப்பட வைக்கிறது.
WAK
Share the post "றூபி டெய்லர் – தன்னம்பிக்கையை பிடிவாதமாக கொண்டிருப்பவர்"