Puttalam Online
international-affairs

ஆசிய கிண்ண உதைபந்தாட்ட சம்பியனானது கத்தார்

  • 1 February 2019
  • 271 views

2019ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண உதைபந்தாட்ட சம்பியனாக கத்தார் அணி முடி சூடிகொண்டது. இன்று (01-02-2019) நடைபெற்ற இறுதி போட்டியிலேயே இச்சாதனையை நிகழ்த்தியது.

ஜப்பான் அணியுடனான இறுதிப்போட்டியில் 3:1 எனும் கோல்கள் கணக்கில் முதல் முறையாக வெற்றி பெற்று சம்பியனானது. சிறந்த கோல் காப்பாளராக கத்தாரின் சாத் அல் சயீத், அதிக கோல்களுக்கு சொந்தகாரராக கத்தாரின் அல் மொயிஸ் அலி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

வளைகுடா நாடுகளினால் கத்தார் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வெற்றியை கத்தாரில் அனைத்து வசிக்கும் கத்தார், கத்தார் அல்லாதோரும் வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இத்தொடரில் பலம்வாய்ந்த அணிகளை எதிர்கொண்ட கத்தார் அணி ஒரு கோல் மாத்திரமே பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All