(பிஷ்ருல் அமீன் ராவுத்தர்)
புத்தளத்தின் உள்ளக வீதிகளில் ஒன்றான ‘மான் முடுக்கு’ குப்பை தொட்டியாக மாறும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய மர்ஹூம் சரூக் ஆசிரியரின் வீட்டிற்கு பக்கத்தினால் ஊடுருத்து நெடுங்குளம் வீதியை அடையும் இவ்வீதியில் மனிதாபிமானமில்லாது, பொறுப்பற்ற தனமாக குப்பைக்கூளங்களை வீசிவிட்டு செல்கின்றனர்.
இவ்வீதியால் பயணிப்போருக்கும், அவ்வீதியில் வசிப்போருக்கும் இது பெரும் அசெளகரியங்களை உண்டாக்குகின்றது.நகர சபை சுத்திகரிப்பாளர்களால் கிரமமான முறையில் சுத்தம் செய்கின்ற பொழுதிலும் இவ்வீதியில் குப்பைகளை கொட்டுவது நின்றபாடில்லை.
அண்மைக்காலத்தில் பல வீதிகள் திருத்தியமைக்கப்பட்ட போதும் இவ்வீதி புனர்நிர்மானத்திற்கு இன்னும் உள்வாங்கப்படவில்லை. இவ்வீதியை பாடசாலை மாணவர்களும் பெண்களும் அதிகமாக பயன்படுத்துகின்ற நிலையில் எப்போதும் குன்றும் குழியுமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
WAK