Puttalam Online
other-news

பல்கலைகழக விகாரையில் சிரமதானப் பணியும் மர நடுகை செயற்றிட்டமும்

(ரூஸி சனூன்-புத்தளம்)

பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் சுதந்திர தின சிறப்பு நிகழ்வுகள் பல்கலைகழக விகாரையில் சுதந்திர தினத்தன்று காலை நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு “நிலையான அபிவிருத்தியை நல்லிணக்கத்தினூடாக ஏற்படுத்தல்” எனும் தொனிப்பொருளினூடாக பல்கலைகழக விகாரையில் சிரமதானப் பணியும் மர நடுகை செயற்றிட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைகழக விகாரையின் தலைமை விகாராதிபதி பமுனுகம ஷாந்தவிமல தேரர், பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.இஷட்.எம்.நபீல், பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், பௌத்த சகோதரர்கள் மற்றும் பேராதனை முஸ்லிம் மஜ்லிஸின் உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சீரற்ற காலநிலையைப் பொருட்படுத்தாது அனைவரும் இப்பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

WAK


One thought on “பல்கலைகழக விகாரையில் சிரமதானப் பணியும் மர நடுகை செயற்றிட்டமும்

  1. Thuwan says:

    Ma sha Allah. Good work…. we are sri lankan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All