Puttalam Online
regional-news

கல்பிட்டி நகர அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

  • 7 February 2019
  • 223 views

(ரூஸி சனூன்-புத்தளம்)

கல்பிட்டி நகர அபிவிருத்தி தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீனுடன் குறுகிய நேர சந்திப்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில் தெரிவித்தார்.

அமைச்சரின் கல்பிட்டி பிரதேச விஜயத்தின் போதே தான் அவருடன் கல்பிட்டி நகர அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2019 ம் ஆண்டிற்கான கல்பிட்டி நகர திட்டமிடல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தன்னிடம் வேண்டியுள்ளதாக தெரிவித்த ஏ.ஆர்.எம். முஸம்மில், இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா ஆகியோருக்கூடாக அமைச்சருக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All