Puttalam Online
current

உணர்ச்சிகள் உயிரோடு தேவைப்படும் நேரம்

  • 11 February 2019
  • 358 views

உணர்ச்சிகள் உயிரோடு தேவைப்படும் நேரம்
————————————————
பேரன்பு மிக்க உடன்பிறப்புகளே…
நீங்கள் யாவரும் அறிந்த புத்தளத்தின் அவமானத்தை.. அந்த குப்பையை தடுக்கும் நாள் அண்மித்துவிட்டது…
புத்தளத்துக்காக புத்தளம் மக்களின் வழக்கை கோர்ட் ஏற்றும் நாள் பல தடைகளைத் தாண்டி இதோ நெருங்கிவிட்டது…
இன மத மொழி பேதங்கள் கடந்து,
எதிர்வரும் பெப்ரவரி – 13, 14, 15 ஐ, புத்தளத்தின் கறுப்பு நாட்களாக சர்வ மதங்கள் சபை (DIRC) – பௌத்த மத்திய நிலையம் – கிறிஸ்தவ சபை – இந்து மகாசபை – ஜம்மிய்யதுல் உலமா – புத்தளம் பெரிய பள்ளி இணைந்து பிரகடனப்படுத்தியிருக்கிறது..!!
உங்கள் உணர்ச்சிகள் உயிரோடு தேவைப்படும் நேரமிது…!!
பெப்ரவரி – 13,
உங்கள் சகலவீடுகளும், வாகனங்களும், கறுப்புக் கொடியேற்றி தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதையும். சகல அரச/ தனியார் அலுவலகங்களிலும் நீங்கள் கறுப்பு பட்டி அணிந்து வேலைக்குச் செல்வதையும் உறுதிப்படுத்தும் நாள்.
பெப்ரவரி – 14,
ஊரின் ஒவ்வொரு ஆத்மாவும் நோன்பு நோற்று, ஏக வல்ல இறைவனிடம் தன் கண்ணீர்துளிகளால் கையேந்தும் நாள்..!,
(ஊருக்கான இப்த்தார் கொழும்பு முகத்திடலில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது)
பெப்ரவரி – 15,
கடையடைத்து, பூரண ஹர்த்தால் அனுஷ்டித்து, மதியம் 1 மணிக்கு கொழும்பு முகத்திடலில் நிகழவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் குடும்பத்தோடும் குழந்தைகளோடும் ஒரு போராளியாய் கலந்துகொள்ளும் நாள்..
“குப்பைத்திட்டத்தை ஒரு சிலரே எதிர்க்கிறார்கள், ஆனால் மக்கள் ஆதரிக்கிறார்கள்” என்று ஊடகங்களுக்கும், உலகுக்கும் அறிவிக்கின்ற அந்த அமைச்சரின் பொய்யை செயல்களால் உடைத்துத் தகர்க்கும் நாள்.
தயாராகுங்கள்…
உங்களது சிறு தியாகத்தில்,
ஒரு வழக்கு வாழவிருக்கிறது..! எதிர்கால சந்ததிகளின் மானமும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் தங்கியிருக்கிறது..!!
உங்கள் கபுறுகளில் நின்று நாளை மில்லியன் குழந்தைகள் துஆ செய்யவிருக்கிறது.
கரம் கொடுங்கள்..! சந்ததி காக்கும் சரித்திரப் போரில் சுவர்களாய் நில்லுங்கள்..!!
எதிர்பார்ப்புகளோடு,
சர்வ மத சம்மேளனத்தின் ( DIRC ) கீழ்,
பௌத்த மத்திய நிலையம் – கிறிஸ்தவ சபை – இந்து மகாசபை – ஜம்மிய்யதுல் உலமா – புத்தளம் பெரிய பள்ளி.
#CleanPuttalam.
08-02-2019


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All