Puttalam Online
regional-news

எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள்

  • 21 February 2019
  • 465 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
.
புத்தளம் மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் பாடசாலையின் மைதானத்தில் மிக விமரிசையாக  நடைபெற்றது.
“ஒன்றாக விளையாடி ஒன்றாக வெற்றி பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் எச்.அஜ்மல் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப்போட்டியில் செரண்டிப், ஸஹீலான், செலான் ஆகிய மூன்று இல்லங்களை சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
 .
மாணவர்களுக்கிடையிலான பல்வேறு போட்டிகளின் முடிவில் செலான் இல்லம் முதலாம் இடத்தினையும், செரண்டிப் இல்லம் இரண்டாம் இடத்தினையும், ஸஹீலான் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.
 .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜெ.ஏ. சந்திரசேன கலந்து கொண்டார். புத்தளம்  முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம்.மிஹ்லார், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் இசட்.ஏ. சன்ஹீர், புத்தளம் பிரதேச சபையின் தவிசாளர் அஞ்சன, ஆசிரியர் ஆலோசகர்களான ஜெ.இஸ்பான், எம்.ராபி உள்ளிட்ட மற்றும் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All