Puttalam Online
current

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் திறந்து வைப்பு

  • 22 February 2019
  • 394 views

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் புதிய வளாகம் நேற்று (21) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக் கல்விக் கட்டமைப்புக்குள் இல்லாமல் இருந்த இவ்விஞ்ஞானக் கல்லூரி, முன்னால் கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சரும் தற்போதைய புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் அவர்களினால் 2009 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

அப்போதைய ஜனாதிபதி கௌரவ. மகிந்த ராஜபக்ச அவர்கள் புத்தளத்திற்கு வந்து இதனை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை தற்காலிக இடத்தில் இயங்கி புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி இன்று பலரது முயற்சியினால், புதிய இடத்தில், புதிய பாடசாலையாக உருவெடுத்துள்ளது.

இப்புதிய வளாகம், வடமேல் மாகான கௌரவ ஆளுநர் பேசல ஜயரத்ன பண்டார அவர்களினால் இன்று (21) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

கல்லூரி அதிபர் ஐ.எல். சிராஜுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஸ்தாபகரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்ட ஐ.தே.க. அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பிரதியமைச்சர் விக்டர் என்டனி, முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, முன்னாள் மாகான சபை உறுப்பினர்களான என்.டீ.எம். தாஹிர், எஸ்.ஏ. எஹியா மற்றும் நகர சபை, பிரதேச சபை தலைவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All