Puttalam Online
regional-news

புத்தளம் மெர்க்குரி பிரச்சினை சம்பந்தமாக கலந்துரையாடல்

  • 22 February 2019
  • 257 views

புத்தளத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்ட மெர்க்குரி பிரச்சினை சம்பந்தமாக வெளியான ஆய்வு அறிக்கைகளை பரீட்சித்து மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என கண்டறிந்து, உடனடி தீர்வுகளை காணுமாரு புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரியிற்கு நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்களினால் , விடுக்கப்பட்ட பணிப்பின் பேரில் இன்று முதற்கட்டமாக இன்சீ (INSEE) நிறுவனத்தின் சுற்றுச்சூழல் அதிகாரியோடும் , சூழலியலாளர் முபாரக் ஆசிரியர் அவர்களோடும் இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று நகர சபையில் நேற்று முன்தினம் (20) நடைபெற்றது.

இதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனல் மின்சார சுற்றுச்சூழல் அதிகாரிகளோடும் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நகர பிதா கே.ஏ.பாயிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு அறுவைக்காடு குப்பைத்திட்டத்திற்கு எதிராக தொடுக்கவிருக்கும் வழக்கிற்கு முன்னாள் பிரதியமைச்சர் என்ற வகையில் கே.ஏ.பாயிஸ் அவர்கள் ஒப்பமிட்டு ஆதரவு வழங்கினார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All