Puttalam Online
paq-news-bulletin

மனித உள்ளங்களை வெல்வோம் – பெப்ரவரி மாத அமர்வு

  • 25 February 2019
  • 239 views

(PAQ Media Unit)

PAQ அமைப்பின் பெப்ரவரி மாத ஈமானிய ஒன்றுகூடல் கடந்த வெள்ளிகிழமை (22-02-2019) முர்ரா மஸ்ஜிதில் நடைபெற்றது.

கத்தாரில் வசிக்கும் சகோதரர்கள் கலந்து கொண்ட இவ்வொன்று கூடலில் அஷேய்க் சியாவுதீன் (மதனி) வளவாளராக கலந்து கொண்டார்.

“ஒரு கணனியில் தகவலை உள்வாங்கி RAM குறிப்பிட்ட நேரத்திற்கே SAVE ல் வைத்திருக்கும் அதனை HARD DISK ல் SAVE செய்தாலே நீண்ட காலத்திற்கு வைத்திருக்க முடியும். அவ்வாறன ஒரு தொழிற்பாடு தான் மனித உள்ளமும்.

மூளை உள்வாங்கி உள்ளத்திற்கு அனுப்பாவிட்டால் நீண்டகாலத்திற்கு அது நிற்காது. எமக்கு நிறைய நண்பர்கள், உறவுகள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட நண்பர்கள், உறவுகளுடன் மிக நெருக்கமாக இருக்கின்றோமே அங்கே இரு உள்ளங்களும் கனக்ட் ஆகியுள்ளது.

போன்னில் சிக்னல் கனக்ட் ஆகினால் தான் இன்னொருவருடன் தொடர்பு கொள்ளலாம். சிக்னல் இல்லாவிட்டால் தொடர்பு எல்லைக்கு வெளியே தான் நிற்க வேண்டும்.

உள்ளங்கள் ஒருவருக்கொருவர் கனக்ட் ஆகும் போது தொடர்புகள் தொடரும். உள்ளங்களை இலகுவாக கனக்ட் செய்திடும், வென்றிடும் வழிமுறைகளில் ஒன்றே புன்னகை. ஒருவரை பார்த்து புன்னகைக்கையில் , நலம் விசாரிக்கையில் உள்ளம் கவரப்படுகிறது, அதனூடாக வெல்லப்படுகிறது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ளம் வெல்லப்படும் போது அங்கே உறவுகள் நிலைத்து நிற்கும்.” என்பதாக அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All