Puttalam Online
regional-news

குழந்தை வைத்திய நிபுணர் சிந்தா அபேசிங்க காலமானார்

  • 1 March 2019
  • 1,280 views

பு/ தள வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர்
சிந்தா அபேசிங்க அம்மையார் 
காலமானார்
 

 

 

 

 

 

சிறந்த குழந்தை வைத்திய நிபுணர்
சிரித்த அவர் முகம், என் விழியில்
சித்திரமாய் தெரிகின்றது இப்போதும்…

அவர் கனி மொழியை கேட்டால் போதும்
அகன்று போகும் அனைத்து நோயும்
புன்னகையால் எங்கள் மனம் கவர்ந்த
புண்ணியவதி அவர்களை-ஆட்கொண்டது
புற்று நோய்… புற்று நோய்….
மருத்துவத் துறைக்காக தன்னை அர்ப்பணித்து
புத்தளம் தள வைத்தியசாலையில்
மனமாற சேவையாற்றி…..
எம் ஊரின் சிறார் பிணி போக்கி….
தனது இறுதி மூச்சியையும் இறுக்கமாய்
தன்னுள்ளே இழுத்துக் கொண்டு
மகரகம வைத்திய சாலையில்
நேற்றிரவு உயிர் நீத்தார்
சிந்தா அபேசிங்க அம்மையார்….
அவரின் மறைவு எம்மூரின் பேரிழப்பு..!
– றாஹிலா உம்மா-


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All