Puttalam Online
other-news

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் காலத்தின் கட்டாயமாகும்

  • 2 March 2019
  • 387 views

(ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)

அபாயகரமான போதை வஸ்த்து வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை முஸ்லிம் சமூகம் முழுமையாக ஆதரிக்க வேண்டும்!

உலகில் அக்கிரமம் புரிந்து திரிவோருக்கு இஸ்லாம் வழங்கும் அதிகபட்ச தண்டனை மரண தண்டனையாகும்  அடுத்தபடியாக கைகளில் ஒன்றையும் கால்களில் நேர் எதிர் ஒழுங்கில் (வலது கால் இடது கை அல்லது இடதுகால் வலது கை) துண்டிப்பதாகும்!  

அது இஸ்லாமிய ஷரீஆவின் தீர்ப்புமாகும்சர்வதேச போதைவஸ்துக் கடத்தல் தங்க முக்கோண வலைப்பின்னலில் எமது அழகிய தேசம் இருப்பதனாலும் பலனாடுகளிச் சேர்ந்த போதைவஸ்துக் கடத்தல்காரர்கள் இலங்கையூடாக தமது சந்தைப் படுத்தலை மேற்கொள்வதாலும் அதிகபட்ச தண்டனை இங்கு அறிமுகம் செய்யப்படுவதும் நிறைவேற்றப் படுவதும் கால சூழமைவு சார் கட்டாயமாகும்.

பல ஆயிரக்கணக்கான மக்களின் பதின்ம வயதினரின் இளைஞர்களின் பாடசாலை சிறார்களின் மற்றும் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்விற்கான அடிப்படை உரிமையை உத்தரவாதப் படுத்தும் ஒரே வழி.

சாதக பாதகங்களை கால இட சூழல் காரணிகளை சட்டவல்லுனர்களும் புத்திஜீவிகளும் ஆராய்ந்து முடிவிற்கு வரட்டும்தனிப்பட்ட முறையில் கொள்கையளவில் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளேன்.

கடுமையான சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படலாம்அரசியல் பழிவாங்கள்களுக்கு பயன்படுத்தப் படலாம் என்பதனால் சட்டங்களை இயற்றாமல் பாரிய குற்றச் செயல்களை தடுக்க முடியாது.

அமுலாக்கம் சார் இருக்கமான சட்ட மற்றும் நீதித்துறை படிமுறைகள் பின்பற்றப் படுவதனை சட்டவல்லுனர்கள் எமது சூழமைவுகளை கருத்தில் கொண்டு உறுதி செய்யட்டும்.

இன்று இலங்கை மக்கள் எதிர் நோக்கியுள்ள மிகப் பெறும் சவாலாக போதைப் பொருள் பாவனை மாறி வருகிறதுதினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் சுமார் 300,000 (x 2??) பேர் போதை வஸ்துகளிற்கு அடிமையாகியுள்ளதாகவும் வருடாந்தம் சுமார் 2500 பேரளவில் புனர்வாழ்வு மையங்களில் வதிவிட சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப் படுவதாகவும்ஏனையோர் வருகை தந்தும் இரகசியமாகவும் சிகிச்சை பெறுவதாகவும்அதிகமானோர் சிகிச்சை பெறாமலே இரகசியமாக போதை பழக்கத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

போதைப் பொருள் கட்டுப்பட்டு திணைக்கள தரவுகளின் படி 2016 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பான  குற்றச் செயல்களில் கைதானோர் தொகை சுமார் 80,000 பேர்கள்அவர்களில் 35%  வீதத்தினர் ஹெரோயின் வைத்திருந்தத்தாகவும், 60% (சுமார் 48,000) கஞ்சா தொடர்பாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக மேல் மாகாணத்தில் 60% வீதத்தினரும் கொழும்பில் 43%   வீத்த்தினரும் கைதாகியுள்ளனர்சனத்தொகையில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 250 நபர்கள் கைதாகும் நிலையில் அதுபோன்று எத்தனை விகிதத்தினர் கைதாகாமல் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது

இலங்கையில் பல பாரிய குற்றச் செயல்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டாலும் 1970 ஆண்டிற்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிறுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், அந்த வகையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படாமல் ஆயுட்கால சிறைத் தண்டனையாக மாறிவிடுகிறது.

அண்மைக்காலமாக இலங்கையின் சகல பிரதேசங்களிலும் அதிகரித்து வரும் போதைவஸ்து வர்த்தகம் மற்றும் பாவனையை ஒழிப்பதற்கு திடசங்கற்பம்பூண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் போதைவஸ்து ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியூடாக பல்வேறு தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தற்பொழுது ஜனாதிபதி மைத்திரி தனக்கு கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் வரும் பொலிஸ் போதைவஸ்து ஒழிப்பு பிரிவினூடாக குறிப்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் லதீஃப் அவர்களின் வழிநடாத்துதலில் நாடு முழுவதும் சுற்றி வலைப்புக்களை துரிதப் படுத்தி அரசியல் தலியீடுகளுக்கு இடம் கொடாது பாரிய அளவில் போதைவஸ்து வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களையும் கைதுசெய்து வருவதோடு அவ்வப்போது வரலாறு காணாத அளவு பெரும் தொகையிலான போதைப் பொருட்களை கைப்பற்றி வருகின்றமையும் நாமறிந்த விடயமாகும்.

2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019 பெப்ருவரி வரை சுமார் 5000 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றிய பொலிசார் சுமார் 52892 நபர்களை கைதுசெய்துள்ளனர், அதே காலப் பிரிவில் சுமார் 1000 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியதோடு 40,000 நபர்களையும் கைது செய்துள்ளனர்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சிய துபாய் நகரில் கைதான போதைவஸ்து வர்த்தக முக்கிய புள்ளி எனக் கருதப்படும் மாகந்துற மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் பலரை இலங்கை பொலிசார் கைது செய்து வருகின்றமையும் நாளுக்குநாள் அது குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமிருப்பதுவும் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

உலகில் இடம்பெறுகின்ற பாதாள உலக சட்ட விரோத கடத்தல் வர்த்தகத்தில் ஆயுதக் கடத்தல் ஆட்கடத்தல் என்பவை போன்று போதைவஸ்துகளின் கடத்தலும் பிரதானமான ஒரு வலைப்பின்னல் வர்த்தகமாக மாறியுள்ளதுகுறுகிய காலத்திற்குள் பணம்படைத்த செல்வந்தர்களாக குபேரர்களாக மாறும் இவர்கள் காலவோட்டத்தில் தத்தமது தேசங்களில் செல்வாக்குமிக்க அரசியல் வாதிகளோடும்அதிகாரிகளோடும்பாதுகாப்புத் தரப்பினரோடும் தொடர்புகளைக் கொண்டிருக்கின்றமைமற்றும் தாமாகவே அரசியலில் ஈடுபடுகின்றமை போதைப் பொருள் பாவனை ஒழிப்பினை ஒரு சிரமசாத்தியமான காரியமாகவே மாற்றிவிட்டுள்ளது.

ஓபியம்” ஹெரோயின் உற்பத்தியில் பிரசித்தமடைந்துள்ள  தங்கத் திரிகோணம்” என அழைக்கப்படும் மியன்மார் தாய்லாந்து லாவோஸ்   பிராந்தியத்தில் இருந்தும் இன்று உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் உலகின் பல பல பாகங்களிற்கும் கடத்தல் செய்யப்படும் மத்திய நிலையமாக இலங்கை இனம் காணப்பட்டுள்ளது,

எந்தவொரு வியாபாரத்திற்கும் அதற்குரிய சந்தைகள் ஏற்படுத்தப் படுவது கட்டாயமாகும்அதேபோன்று காலவோட்டத்தில் அதில் ஈடுபடுகின்றவர்கள் தொகையும் அதிகரித்துச் செல்கின்றமையும் யதார்த்தமான விடயமாகும்அந்த வகையில் போதை வஸ்துக்களைச் சந்தைப் படுத்துவோர் குறிப்பாக கட்டிளம் பருவத்தில் உள்ள பதின்ம வயதினரையே இலக்கு வைக்கின்றனர்.

குறிப்பாக பதின்ம வயதினர் பாடசாலை பருவத்தில் இருப்பவர்கள் ஆதலால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விதவிதமான வழிவகைகளில் போதைப் பழக்கங்களை அறிமுகப் படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளனமென்பானங்கள்இனிப்பு வகைகள்டொபிசாக்கலேட் போன்றவைஸ்டிக்கர் வகைகள்சிகரட் வகைகள் மருந்து மாத்திரைகள் என பல்வேறு வடிவங்களில் மாணவர்கள் போதைப் பழக்க வழக்கங்களிற்கு அடிமைகளாக்கப் படுகின்றனர்.

போதையற்ற தேசம் ஜனாதிபதி செயலணி இலங்கையில் பாடசாலைகளில் 2016 மேற்கொண்ட கணிப்பீட்டின் படி சுமார் 13%   வீதமான பாடசாலை மாணவர்கள் ஏதேனுமொரு போதை பாவனையில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்புதேசிய புகையிலை மற்றும் அல்கொஹோல் அதிகாரசபைமருத்துவ சபை ஆகியவற்றின் தரவுகள் மூலம் அறிய வந்துள்ளதாகவும்  தெரிவித்தது.

இலங்கை பொலிஸ் திணைக்கள போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் தகவலின் படி போதைவஸ்து பாவனை பல பாரிய குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாகிறதுஉரிய வேளைக்கு தமது பாவனைக்கு போதை வஸ்துவினை கொள்வனவு செய்ய பணம் இல்லாத பொழுது திருட்டுகொள்ளையிடல்மிரட்டிப் பணம் பறித்தல் வீட்டில் வன்முறைகளை மேற்கொள்ளுதல்கொலைகளை செய்தல் என பல குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றமை முறைப்பாடுகளில் இருந்து தெரியவந்துள்ளதாம்அதேவேளை பல குடும்பத்தினர் விடயங்கள் வெளிவருவதனை விரும்புவதில்லையாதலால் முறையீடுகளை செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்கின்றனர்அதேபோன்றே போதை வஸ்து பாவனைகளில் உள்ளோர் பாலியல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டிருக்கின்றமை கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாக அறிய வந்துள்ளது.

மது மற்றும் புகைத்தல் பழக்கமுள்ளவர்கள் அபாயகரமான போதைவஸ்து பாவனைக்கு இலகுவாக உள்வங்கப் படுகிறார்கள், ஜனாதிபதியின் போதைப் பொருளற்ற தேசம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கிராமங்களை கட்டி எழுப்புவோம் வேலைத்திட்டம் நாடு முழுவதும் துரிதப் படுத்தப் பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது, அடுத்த கட்ட நடவடிக்கையாக நாடு முழுவதுமுள்ள கசிப்பு உற்பத்தி நிளியங்களுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளமை மக்களது வரவேற்பைப்பெற்றுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையத்தின் கடந்த வருடத்திற்கான புள்ளி விபரங்களின்   படி சராசரி இலங்கையின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் மக்கள் மதுபவனைக்காக  Rs200,000  இரண்டு இலட்சம் ரூபாய்களையும்  புகைத்தலுக்காக  Rs .150,000  ஒன்றரை இலட்சம் ரூபாய்களையும் செலவிடுகின்றனர். அது வறுமை ஒழிப்பிற்காக வழங்கப்படுகின்ற இரண்டு மாத கொடுப்பனவுகளிற்கு சமனானதாகும்.

மதுபானம்புகையிலை மீதான வரிகளினூடாக இலங்கை அரசிற்கு வருடாந்தம் 143,000 கோடி (143 பில்லியன்) ரூபாய்கள் வருவாய் கிடைக்கின்ற அதேவேளை புகைத்தல் மற்றும் மதுபான பாவனைகளால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் நோய்களால் அரசிற்கு 212,000 கோடி ரூபாய்கள்  (212  பில்லியன் ரூபாய்கள்) செலவாகின்றன. (புகைத்தல் வினைகள் 71.5 பில்லியன்  மது வினைகள் 141 பில்லியன் )

இலங்கை சனத்தொகையில் சுமார் 40%  வீதமானோர் 60 இலட்சம் பேர் மதுபாவனை பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அது தொடர்பான நோய்களால் வருடாந்தம் சுமார் 7500 பேர் இறக்கின்றனர். அந்த வகையில் உலகில் மது பவனில் இலங்கை நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதேவேளை சனத்தொகையில் சுமார் 30%  மானோர் புகைக்கின்றனர், 40,000 பாடசாலை மாணவர்கள் உற்படவருடாந்தம் சுமார் 13100 பேர் புகைத்தல் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.

ஐரோப்பாவில் 95%  மக்கள் மது பாவனை பழக்கமுடையவர்கள் அங்கு தலைக்கு .அரை லீட்டரே பாவிக்கின்றனர்இலங்கையில் தலைக்கு 3.3 லீட்டர்கள் பாவிக்கின்றனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

POEM – A puzzling game

  • Tuesday,26 May 2020

POEM- Diabetes

  • Saturday,23 May 2020

POEM – The nature’s smile

  • Monday,18 May 2020
சுவடிக்கூடம்View All