Puttalam Online
other-news

தமிழ்த் தேசிய முன்னணி – ஜே.வி.பி சந்தித்து பேச்சுவார்த்தை

  • 12 March 2019
  • 178 views

(அஷ்ரப் ஏ சமத்)
 .
தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவா் ஆர் சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி தலைவா் அநுரக்குமார திசாநாயக்கா ஆகியோா்க்களுக்கிடையிலான கூட்டம் நேற்று (11) பத்தரமுல்லையில் உள்ள  ஜே.வி.பி அலுவலகத்தில் நடைபெற்றது.
 .
அதிகாரமளிக்கப்பட்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் 20வது அரசியல் அமைப்புக்கு ரீ.என்.ஏ வின் ஆதரவைப் பெறுதல் சம்பந்தமாக  இங்கு இரு கட்சிக் பிரநிதிகளுக்கிடையே பேச்சுவாா்த்தை நடாத்தப்பட்டது.
 .
இங்கு கருத்து தெரிவித்த அநுகுமார திசாநாயக்க ஜனாதிபதி முறைமை ஒழித்து 225 பாராளுமன்றத்திற்கு அதிகார வழங்குதல் போன்றவற்றைக்கு நாங்கள் தமிழ்த் தேசிய முன்னணியிடம் ஆதரவு கேட்டு பேசினோம்.
 .
இருந்தும் இந்த நாட்டில் உள்ள 1 கோடி 50 இலட்சம் மக்களிடம் ஜனாதிபதி முறைமை ஒழிப்பதற்கு நாங்கள் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு நாங்கள் செல்வோம் என தெரிவித்தாா்  ரீ.என்.ஏ தொடா்ந்தும் நாங்கள்  புதிய அரசியல் முறைமைகள் பற்றியும் நாங்கள் தொடா்ந்தும் பேசுவதாகவும் அநுரகுமார திசாநாயக்க அங்கு தெரிவித்தார்.
 .
இங்கு கருத்து தெரிவித்த ஆர் சம்பந்தன் ஜனாதிபதி முறைமை மற்றும்  20ஆவது அரசியலமைப்பு பற்றி நாங்கள் பேசினோம். அதற்கு முன்  அரசியல் திருத்தம் சம்பந்தமாக அண்மையில் ஜனாதிபதி பிரதமரிடம் பேசினோம் . அவ்விடயங்களுக்கு  ஜே.வி. பி ஆதரவு தெரிவிப்பது பற்றி மீண்டும் நாங்கள் பேசுவோம் எனவும்  ஆர். சம்பந்தன் அங்கு தெ்ரிவித்தார்.
 .
WAK
 .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All