Puttalam Online
regional-news

Bridge Academy இன் சித்திரம் வரைதல் பாடநெறியின் அங்குரார்ப்பன நிகழ்வு

  • 12 March 2019
  • 127 views

புத்தளம் Hallam City Campus, இந்தியாவில் உள்ள பிரபல கலையியல் துறை கல்வி நிறுவனமான Bridge Academy உடன் இணைந்து சித்திரம் வரைதலுக்கான பாடநெறிகளை ஆரம்பிக்க இருக்கின்றது. இது தொடர்பான அங்குரார்ப்பன நிகழ்வு அண்மையில் புத்தளம் Hallam City Campus இனது கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் வரவேற்புரையை, Hallam City Campus இனது பிரதான நிறைவேற்று அதிகாரி திரு. A.L.M. Hassan நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து Bridge Academy இனது இலங்கைக்கான பணிப்பாளர் திரு. Shri Sudaron பாடநெறி தொடர்பான விளக்க உரையை நிகழ்த்தினார். Bridge Academy இனது செயன்முறை பரப்பு, பிரபலம், முக்கியத்துவம், அங்கீகாரம் தொடர்பில் பலவிதமான கருத்துக்களை குறிப்பட்டார். விஷேடமாக சித்திரம் வரைதலில் சிறுவர்களை ஈடுபடுத்தும் போது, அவர்களின் வாழ்க்கைக்கான சிறந்த அத்திவாரம் இடப்படுகின்றது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், அவ்வாறான சிறுவர்களின் மனோநிலையை சமூக விரோத செயல்களில் இருந்து திசைத்திருப்பக் கூடிய வாய்ப்பும் இருப்பதாக குறிப்பிட்டார்.

இப்பாடநெறியின் பிரதான வளவாளரான Dr.M.M. Mohamed அவர்கள் உரையாற்றும் போது, இவ்வாறான பாடநெறிகளை பயின்ற மாணவர்கள் பலபேரில் சிறந்த மாற்றங்களை கண்கூடாக கண்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அத்துடன் இப்பாடநெறி தரம் 09 இற்கு கீழால் ஒரு பிரிவும், அதற்கு மேலால் மற்றொரு பிரிவுமாக நடாத்தி, பாடநெறியின் இறுதியில் கண்காட்சி ஒன்றை வைக்க உத்தேசித்துள்ளதாகவும் கூறினார்.

வருகைத்தந்த சபையோர், பாடநெறி தொடர்பான சந்தேகங்ககளை வளவாளரிடம் கேட்டுக்கொள்வதற்கான அவகாசம் கொடுக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதி அம்சமாக, Hallam City Campus சார்பாக, பிரதான நிறைவேற்று பணிப்பாளர் திரு. A.L.M. Hassan அவர்களுக்கும், பாடநெறியின் பிரதான வளவாளர் Dr. M.M. Mohamed அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

Bridge Academy இன் சித்திரம் வரைதல் பாடநெறி, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 04.00மணி முதல் 06.00மணி வரை புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள Hallam City Campus வளாகத்தில் நடைபெறும்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All