Puttalam Online
regional-news

குப்பைக்கு எதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகர்வு

  • 13 March 2019
  • 209 views

(SACP Marikkar)

19 ஆம் திகதி அதிகாலை சுபஹு தொழுகையோடு, புத்தளம் தொகுதிவாழ் எமது மக்களை சுமந்த பஸ்கள் புறப்பட்டு 9.00 மணிக்கு முன் கொழும்பை அடைய வேண்டும்….!

Gall face இல் சரியாக 9.30 க்கு protest ஆரம்பமாகும்.

புத்தளத்தின் பிரச்சினையை,
இலங்கையின் இதயத்திலிருந்து ஒலிபரப்பும் இம்முயற்சி, நிச்சயம் தேசம் தாண்டி சர்வதேசத்தின் கதவுகளை தட்டும்..!
அருவாக்கல்லில் ஒரு அதிர்வைத் தரும்..!! செவிட்டுப் பாராளுமன்றத்தின் செவிப்பறைகளை கிழிக்கும்..!!

இது, விலைக்கு வாங்க முடியா மனிதர்களோடு.. விலைகொடுத்துப் பழகியவர்கள் மோதும் களம்..!
அரசியல்…, அச்சுறுத்தல்… இனவாதம்.., பணம்… என்ற அணைத்து அசுத்தங்களும் திரைமறைவில் இணைந்திருக்கும் தளம்..!!

மக்கள் சக்தியால் மாத்திரமே இந்த மாபியாக்களை மடக்கமுடியும்!!!

தயாராகுங்கள்…
ஒரு நாள் ஒதுக்குங்கள்…
இலட்சியப் பயணம் போவோம்…
தலை நகரில் ஒரு தவம் செய்வோம்!!!

உடைகளுக்கல்ல, மருத்துவத்துக்கல்ல, தொழிலுக்கல்ல, படத்துக்கல்ல…
எம் பரம்பரைக்காய் ஒரு முறை கொழும்பு செல்வோம்!!!

19 – செவ்வாய், குப்பைத்திட்டத்தின் மீது நெருப்பாக விடியட்டும்…!
எல்லோரும் சுபஹு தொழும் ஒரு அழகான நாளை எமக்கு அருள் செய்யட்டும்..!!

பொய்யின் கோட்டைகள் மிகவும் மெல்லியது..! எழுந்து நடப்போம், தகர்த்துத் திரும்புவோம்…!!

#CleanPuttalam

குறிப்பு :

1. உங்கள் வருகையை பெயருடன் “coming” என்ற SMS மூலம் பின்வரும் இலக்கங்களுள் ஒன்றிற்கு உறுதிப்படுத்துங்கள்.
0775562641, 0775979793, 0775678902

2. “பஸ்”களை sponsor செய்ய விரும்புவோர் “sponsor”என்ற SMS மூலம் உறுதிப்படுத்துங்கள்.

3. செவ்வாய் 19-03-2018, அதி காலை 06 மணிக்கு உங்கள் அனைவரையும் எதிர்பார்த்து கடற்கரையில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All