Puttalam Online
regional-news

உடப்பு மீனவர்களின் படகு இயந்திரங்கள் திருட்டு

  • 13 March 2019
  • 109 views

(க.மகாதேவன்)
.
உடப்பு சின்னக்கொலனி கிராம கடற்றொழிலாளர்களின் இயந்திரப்படகின் இரண்டு இயந்திரங்கள் (என்ஜின்) செவ்வாய்க்கிழமை (12) நள்ளிரவு கடற்கரையில் இருந்து காணாமல் போயுள்ளதாக அதன் உரிமையாளர்கள் உடப்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
.
திரு.க.விநாயகமூர்த்தி மற்றும் திரு.த.காந்தராஜா ஆகியோரின் 25குதிரை வலு சக்தி கொண்ட இரண்டு சுசுகி இயந்திரங்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.சுமார் இரண்டு இயந்திரங்களும் 6லட்சம் பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
கடல் மாா்க்கமாக வந்து இதனை கொண்டு போய் இருக்கலாம் என நம்பப்படுகின்றது.அத்துடன் ஒரு வீட்டிலும் போன் மற்றும் மாலையும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All