Puttalam Online
regional-news

CleanPuttalam அணி எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தது

  • 14 March 2019
  • 490 views

CleanPuttalam அணி எதிர்க்கட்சி தலைவரை அவரது விஜயராம இல்லத்தில் நேற்று (13-03-2019) சந்தித்தது.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிராக புத்தளம் மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் CleanPuttalam அணி முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடனான சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரையில் இடம்பெற்றது.

“இத்திட்டத்தை நிறுத்துவதற்கு தான் பூரண ஒத்துழைப்பு தருவதாகவும், இதற்கு என தனியான ஒரு ஊடக சந்திப்பை தனது அலுவலகத்தில் ஏற்படுத்தி தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் “இத்திட்டம் தனது அரசாங்கம் உள்ள காலப்பகுதியில் வந்ததாகவும், அது வெறுமனே சுண்ணக்கல் அகழ்ந்த குழிகளை மூடுவதற்காகவே நடைமுறை படுத்த எத்தனித்ததாகவும், ஆனால் இப்போது இத்திட்டம் வர்த்தக ரீதியாகவும், தரகுப்பணம் சம்பாதித்து கொள்வதற்காகவுமே நடைமுறைப்படுத்த முயற்சிகள் செய்வதாக தெரிவித்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ அவர்களும் வீற்றிருந்து இதன் பாதகங்களை எத்திவைத்தார்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All