Puttalam Online
regional-news

புத்தளம் அமைதி பேரணியில் பதற்றம்; இருவர் கைது

  • 22 March 2019
  • 1,199 views

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசின் திட்டத்திற்கு எதிராக கடந்த 200 நாட்களுக்கு மேலாக புத்தளம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஒரு பகுதியாக “அமைதி பேரணி” ஒன்று இன்றும் (22-03-2019) முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட விளையாட்டு அரங்கு, கேட்போர் கூடம் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை திறந்து வைக்கும் முகமாக புத்தளம் நகரிற்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் கவனத்தை ஈர்த்து இக்குப்பை திட்டத்தின் பாதகங்களை ஜனாதிபதிக்கு எத்திவைக்கும் முகமாக இப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அவ்வமைதி பேரணியில் பதற்றம் ஏற்பட்ட நிலையில் போலீசார் தாக்குதல் மேற்கொண்டனர். இதன்போது பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இருவரை போலீசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All