Puttalam Online
regional-news

புத்தளம் ஏழாம் வட்டாரத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள்

  • 22 March 2019
  • 306 views

(ரூஸி சனூன்-புத்தளம்)
 .
புத்தளம் ஏழாம் வட்டாரத்தில் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் நேற்று முன்தினம் (20) மாலை புத்தளம் கொப்பரா பள்ளிக்கு அருகில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 .
அரசாங்கத்தின் கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சின் அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமியின் நிதி ஒதுக்கீட்டில் இந்த அபிவிருத்தி பணிகள்ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 .
ஐ.தே.கட்சியின் புத்தளம் ஏழாம் வட்டார அமைப்பாளர் எம்.என்.எம்.நுஸ்கியின் வேண்டுகோளின் பேரில் இந்த அபிவிருத்திகள் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 .
கொப்பரா பள்ளி மக்தப் வகுப்பு கட்டத்துக்கான அடிக்கல் நடல், மூன்றாம் குறுக்குத்தெரு பாதையினை காப்பட் வீதியாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பணம், ஏற்கனவே பூரணப்படுத்தப்பட்ட கொப்பரா பள்ளி காப்பட் பாதையினை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வுகள் என்பன ஒட்டு மொத்தமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 .
இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம், ஜீ. விஜேதாஸ உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச பொது  மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All