Puttalam Online
regional-news

மாவட்ட விளையாட்டரங்க தொகுதி புத்தளத்தில் திறந்து வைப்பு

  • 24 March 2019
  • 585 views

ரூஸி சனூன்  புத்தளம்
.
புத்தளம் நகர மத்தியில் சகல வசதிகளுடன் கூடிய நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டத்துக்கான விளையாட்டரங்க தொகுதியினை தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்து மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
.
புத்தளம் நகர பிதா கே. ஏ.பாயிஸின் அயராத முயற்சியின் பலனாக, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  புத்தளம் மாவட்ட விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான வெற்றிகளுக்கான வாயில்களை திறந்து மாவட்ட மட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலின் கீழ் இந்த விளையாட்டரங்க தொகுதி நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
.
இந்த விளையாட்டரங்க தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அன்றைய தினம் திறந்து வைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் குறித்த நேரத்தில் புத்தளம் மக்களால் அங்கு முன்னெடுக்கப்பட்ட அறுவைக்காலு குப்பைக்கெதிரான போராட்டம் காரணமாக அங்கு ஜனாதிபதி வருகை தராத நிலையில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்கள் பங்கு பற்றுதலுடன் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை திறந்து வைத்தார்.
.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் 11 கால்பந்தாட்ட கழகங்களின் வீரர்களும் மைதானத்தில் அணிவகுத்து நின்று அதிதிகளை வரவேற்றனர்.
.
அன்று காலை புத்தளம் லிவர்பூல் அணிக்கும் எருக்கலம்பிட்டி கால்பந்தாட்ட கழகத்துக்குடையில் நடைபெற்ற குறுகிய நேர கண்காட்சி கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணி 03 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.
.
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கினால், புதிய மைதானத்தில் நகர பிதா பாயிஸின் பூரண அனுசரணையோடு தொடராக நடத்தப்படவுள்ள நகர பிதா வெற்றிக்கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட தொடரில் எந்த அணிகள் எந்த அணிகளுடன் விளையாட உள்ளன என்பது பற்றிய டொஸ் நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற்றன.
.
இதே வேளை அன்று மாலை இலங்கை விமானப்படை அணிக்கும், புத்தளம் கால்பந்தாட்ட லீக் அணிக்குடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கால்பந்தாட்ட போட்டியில் இலங்கை விமானப்படை அணி 02 : 01 கோல்களினால் வெற்றி பெற்றது.
.
குறிப்பு  :
.
டயலொக் பெயர் பொதித்த அங்கி அணிந்திருப்போர் விமானப்படை.
ஆரஞ்சு நிற அங்கி அணிந்திருப்போர் புத்தளம் லீக் அணியினர்.
.
(மாலை நடைபெற்ற சிநேகபூர்வ ஆட்டம்)
.
அமைச்சர் கைலாகு கொடுக்கும் கருப்பு நிற அங்கியினர் லிவர்பூல்.
மஞ்சள் நிற அங்கியினர் எருக்கலம்பிட்டி.
.
(காலையில் நடைபெற்ற கண்காட்சி ஆட்டம்)
.
WAK
.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All