Puttalam Online
regional-news

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உதைபந்தாட்ட போட்டியில் புத்தளம் சாஹிரா அணியினர்

  • 26 March 2019
  • 868 views

(AHA Hifans)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (United Arab Emirates) வசிக்கும் இலங்கையர்களுக்காக கம்பளை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (2019-03-22) நடாத்தப்பட்ட அணியிற்கு 9 பேர் கொண்ட Inter School Futsal League 6A-side Tournament 2019 கால்பந்து போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் புத்தளம் ஸாஹிரா பாடசாலையின் பழையமாணவர்கள் மற்றும்  புத்தளத்தை பிறப்பிடமாக கொண்டவர்கள்  ஒன்றாக ஒருமித்து பாடசாலை Zahira College Puttalam இனை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் Puttalam Zahira Green மற்றும்  Puttalam Zahira Maroon  எனும் 2 அணிகளாக களமிறங்கினர்.

Puttalam Zahira Green அணியிற்கு  Rushdy Ahamed தலைமை வகிக்க, அணியில் Rinoos Ahamed, Thasneem, Ashrafdeen, Sanoos, Aakib, Mawroos, Dilshan, Fazil ஆகியோர் களமிறங்கினர்.

Puttalam Zahira Marron அணியின் அணித்தலைவராக Hammadh உம்  அணியில் Roshan, Hifans, Asfar, Kiyas, Rifkhan, Afham, Aroos, Rimas ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

18 ஆணிகள் கொண்ட இச்சுற்றுத்தொடரானது 4 குழுக்களாக வகுக்கப்பட்டு  குழு ரீதியான (group stage) போட்டிகளாக நடைபெற்றன.

Puttalam Zahira Marron அணியானது குழு ரீதியான போட்டிகளில் 4 போட்டிகளில் கலந்துகொண்டு 2 போட்டிகளில் போட்டிசமநிலையிலும்  2 போட்டிகளில் தோல்வியுற்றமையினால் விலகல் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.

Puttalam Zahira Green அணியானது குழு ரீதியான போட்டிகளில் 3 போட்டிகளில் கலந்துகொண்டு 2 போட்டிகளில்  வெற்றியும் 1 போட்டியில் தோல்வியுமுற்று தகுதிகாண் போட்டியிற்கு (qualifier / pre-quarter final) முன்னேறியது.

Puttalam Zahira Green அணியானது Ceylon அணியுடன் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டு பலப்பரீட்சை நிகழ்த்தியது. போட்டியின் தொடக்கத்தில் இருந்து Puttalam Zahira Green அணியானது களத்தில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாது துரதிஸ்டவசமாக இலக்கை பெற (goal score) கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளையும்  தவறவிட்டது.

இரு அணிகளும் goal பெற்றுக்கொள்ள சிரமப்பட்டிருந்த சமயத்தில் பார்வையாளர்களினால் போட்டி தண்ட உதையில் முற்று பெரும் என்று நினைத்திருந்த தருணத்தில் போட்டி முடிவடையும் சற்று முன்பாக எதிர்பாராத விதமாக Ceylon அணியினால் goal இடப்பட்ட குறுகிய நேர இடைவெளிகளில் நடுவரின் இறுதி விசில் சத்தத்துடன் போட்டியானது முற்று பெற்றது.

Puttalam Zahira Green மற்றும் Maroon அணிகளுக்காக
Thasneem (ZG) – 2 ⚽
Aroos (ZM) – 2 ⚽
Ashrafdeen (ZG) – 1 ⚽
Aakib (ZG) – 1 ⚽
Kiyas (ZM) – 1 ⚽
ஆகியோர் goal களை பெற்றுக்கொடுத்தனர்.

இப்போட்டி தொடரில் Mawanella Zahira College முதலாமிடத்தையும், Gampola Zahira College இடண்டாம் இடத்தையும், Dubai Lankans FC மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சியதில் வசிக்கும் புத்தளம் மக்கள் பலர் சிரமம் பாராது தூர இடங்களில் இருந்து  வருகைதந்து  ஊக்கம், உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாது Zahira College Puttalam அணியின் வீரர்களுக்கான போக்குவரத்து வசதி,  உணவு ஏற்பாடு மற்றும் சிற்றுண்டி உபகாரங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All