(ரூஸி சனூன்-புத்தளம்)
. புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் புதிய கால்பந்தாட்ட தொடரான, நகர பிதா (சிட்டி பாதர்) வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட தொடர் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கு தொகுதியில் வெள்ளிக்கிழமை (29) மாலை மிக கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
.
புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் இத்தொடருக்கு பூரண அனுசரணை வழங்க முன் வந்துள்ளார்.
.
புத்தளம் கால்பந்தாட்ட லீக் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்பு நடாத்தும் இந்த புதிய தொடரில் லீக்கில் அங்கத்துவம் வகிக்கின்ற புத்தளம் விம்பிள்டன், லிவர்பூல், போல்டன், த்ரீ ஸ்டார்ஸ், ட்ரிபிள் செவன், நியூ ப்ரண்ட்ஸ், ஒடிடாஸ், யாழ் முஸ்லிம் யுனைடெட், நியூ ஸ்டார்ஸ், கல்பிட்டி பேர்ல்ஸ் மற்றும் எருக்கலம்பிட்டி ஆகிய 11 கழகங்கள் பங்கேற்கின்றன.
.
இதன் முதலாவது போட்டியில் தில்லையடி நியூ ப்ரண்ட்ஸ் அணியும் புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.
.
இந்த போட்டியில் நியூ ப்ரண்ட்ஸ் அணி 04 : 00 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதோடு த்ரீ ஸ்டார்ஸ் அணி முதல் போட்டியிலேயே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
.
போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம். பஸ்ரின், எச்.எச். ஹாம்ருசைன், எம்.ஐ.எம். அலி, எம்.எம். ஷிபான் ஆகியோர் கடமையாற்றினர்.
.
இத்தொடரின் அனைத்து போட்டிகளும் விலக்கல் முறையிலான போட்டிகளாகும். தொடரில் சம்பியன் ஆகும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு வெற்றிக்கிண்ணத்துடன் 20 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.
.
ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் தலைவரும், நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம். ரபீக், லீக் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஸாத் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
.
குறிப்பு :
.
நியூ ப்ரண்ட்ஸ் அணி கறுப்பு நிற அங்கி.
த்ரீ ஸ்டார்ஸ் அணி வெள்ளை நிற அங்கி.
.
WAK
.
Share the post "சிட்டி பாதர் தொடரின் முதலாவது போட்டியில் நியூ ப்ரண்ட்ஸ் அணி வெற்றி"