Puttalam Online
other-news

இலங்கை துருக்கி தூதரகத்தில் கட்டுரைபோட்டிக்கான பரிசளிப்பு விழா

  • 6 April 2019
  • 180 views

(அஷ்ரப்  ஏ சமத்)
 –
கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தினாலும் ரிக்கா எனும் துருக்கி உதவும் நிறுவனமும் இணைந்து  இலங்கையில் உள்ள ஆங்கில மொழி முலம் “துருக்கி உலகில் ஒரு பிராந்திய சக்தியை முன்நோக்கி வருகின்ற நாடு “ என்ற தலைப்பில்  இக்  கட்டுரைப்போட்டியொன்றை நடாத்தியது. நூற்றுக் கணக்கான கட்டுரைகளுள் 3 கட்டுரைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.
 –
அவர்களுக்கு பரிசளிக்கும் வைபவம் கொழும்பு துருக்கி தூதரகத்தில் நடைபெற்றது. தூதுவர் துன்கா ஓக்கண்டரினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
 –
முதலாம் இடம் நர்மாடா ஆனந்தக்குமார் டெயிலி நியுஸ் ஊடகவியலாளர். இவருக்கு மடிக்கணணி மற்றும் புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் என்.யு. அப்துல் ரசாக் உடையார்,  ஊடகவியலாளர் இவருக்கு மடிக்கணணி பரிசாக் வழங்கப்பட்டது. முன்றாம் இடம் மொஹமட் அஸ்மி  – களுத்துறை ஒரு இலட்சம் ருபா பெறுமதியான புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது.
 –
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன், செயலாளர் சாதீக் சிகானும் கலந்து கொண்டிருந்தனர்.
 –
WAK
 –


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All