Puttalam Online
regional-news

உடப்பில் கவிஞர் ப. கனேஸ்வரனின் கவிதை நூல்கள் அறிமுக விழா

  • 6 April 2019
  • 264 views

கவிஞர் ப. கனேஸ்வரன் அவர்களின் கவிதை நூல்கள் அறிமுக விழா அண்மையில் உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு, புத்தளம் நகர பிதாவும், கவிஞருமான கே.ஏ. பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

கண்டி பொகவந்தலாவையை பிறப்பிடமாகவும், புத்தளம் உடப்பை வசிப்பிடமாகவும் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ப. கனேஸ்வரன் அவர்கள் இதுவரை 8 கவிதை நூல்களை எழுதி வௌியிட்டுள்ளார்.

விரல் சூப்பி, கள்ளச்சி, ரப்பர் பாஞ்சாலிகள், விளம்பர் ஒட்டாதீர்கள் என்ற ஐந்து நூல்கள் வௌியீடு செய்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபை தலைவர் திரு. தெச்சினாமூர்த்தி உட்பட ஊர்மக்களும் கலந்துகொண்டனர்.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All