புத்தளம் மணல்குன்று மன்பவுஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தேசிய ரீதியாக பெருமையை பெற்றுக்கொடுத்த இரு மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உஸ்தாத்மார்கள், முஅல்லிமாக்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (04) இரவு கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
–
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தினால் அகில இலங்கை ரீதியில் அண்மையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் முப்பது ஜுஸ்ஊக்கள் மனனப் போட்டியில் புத்தளம் மணல்குன்று மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் அனுராதபுரம் இக்கிரிக்கொள்ளாவினை சேர்ந்த அல் ஹாபிழா ஹப்ஸா ஹலாபுதீன் என்ற மாணவி முதலாம் இடத்தையும், திருகோணமலை பெரியகடைவீதியை சேர்ந்த சமீஹா அப்லல் என்ற மாணவி மூன்றாம் இடத்தினையும் பெற்று கல்லூரிக்கு பெருமையை பெற்றுக்கொடுத்திருந்தனர்.
–
இவர்களை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
–
கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.ரியாஸ் (தேவ்பந்தி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மேர்சிலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அல்உஸ்தாத் நஸ்றுல் ஹஸன், கல்லூரி ஸ்தாபகர் ஏ.எம். அஹமத் நபீல், கல்லூரி பரிபாலன சபை தலைவர் எம். ஷபீக், சமூகவியலாளர் எஸ்.ஆர்.எம். முஹுசி உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
–
WAK
–
Share the post "தேசிய ரீதியாக பிரகாசித்த மாணவிகள் பாராட்டி கௌரவிப்பு"