Puttalam Online
regional-news

மனித உரிமைகள் 11வது சான்றிதழ் பாடநெறிக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது

  • 8 April 2019
  • 306 views

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் மனித உரிமைகள் கற்கை மையம் FRIENDS நிறுவனம் மற்றும் கருவலகஸ்வெவ – புத்தளம் மனித உரிமைகள் சமூக மையம் என்பன இணைந்து 2019 ஜூன் மாதம் முதல் நடத்தவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மூன்று (3) மாத சான்றிதழ் பாடநெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழி மூலம்களை தெரிவு செய்யலாம்.

அரச, அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தகர்கள் மற்றும் சமூக சேவையில் ஈடுபடும் சமூக சேவையாளர்கள், சிவில் சமூக அங்கத்தவர்கள் உள்ளிட்டோர் இப்பாடநெறியின் இலக்க குழுவாக இனம்காணப்பட்டுள்ளனர்.

பதிவு கட்டணமாக 500 ரூபா, பாடநெறி கட்டணமாக 2000 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இத்தொகை வருட இறுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும்.)

தகைமைகள்:

• அரச, அரச சார்பற்ற மற்றும் சிவில் சமூக அமைப்புக்களில் பணியாற்றும் 20 வயதுக்குக் குறையாத ஆண் பெண் இரு பாலாரும் இப்பாடநெறியைப் பயில்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

• க.பொ.த (உ/த) கலை/ வணிக/ விஞ்ஞானம் சித்தி அல்லது,

• க.பொ.த (சா/த) உடன் இரண்டு வருடம் மனித உரிமைகள் தொடர்பான சமூக சேவை அனுபவம்

இவ்பாடநெறிக்கான வகுப்புக்கள அரபா நகர் ஒழுங்கை, கொழும்பு வீதி, ரத்மல்யாயயில் அமைந்துள்ள FRIENDS நிறுவனத்தில் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும். பாடநெறியை சிறந்த முறையில் நிறைவேற்றியவர்களுக்கு கொழும்பு பல்கலைக் கழகத்தின் ஊடாக சிறந்த சான்றிதழ் வழங்கப்படும்.

விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி 2019 மே மாதம் 20 ஆம் திகதி ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

முதலெழுத்துக்களுடன் பெயர், சொந்த மற்றும் தொழில் முகவரி, பால், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை எண், அதிகூடிய கல்வித் தகைமையும் பிற தகைமைகளும், தொலைபேசி இலக்கம் மற்றும் சமூக சேவை அனுபவம் ஆகியவை உள்ளடங்கிய FRIENDS நிறுவனத்திலுள்ள விண்ணப்பப்படிவத்தை (கீழே இணைக்கப்பட்டுள்ளது.) பெற்று பூர்த்தி செய்து கீழ் குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்பவும்.
மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் கீழ் குறிப்பிடப்படும் உத்தியோகத்தரை அணுகவும்.

Project Officer
M.F.Fathima Sufiyani
FRIENDS,
Arafa Nagar Lane,
Colombo Road,
Rathmalyaya,
Puttalam – 61300
(friends.sufiyani@gmail.com ) 0775951211/ 0323295972 – 973

WAK

5_6134190910553981013 (நிரப்பப்பட வேண்டிய விண்ணப்பபடிவம்)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
சுவடிக்கூடம்View All