Puttalam Online
regional-news

ஏழு வருடத்தை பூர்த்தி செய்தது PAQ அமைப்பு

  • 9 April 2019
  • 211 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் (Puttalam Association Qatar-PAQ) ஏழாவது பொது கூட்டம் (05-04-2018) கடந்த வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகையை தொடர்ந்து கத்தார் பனார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாஸ்டர் ஆதம் பைரூஸின் கிராஅத்துடன் ஆரம்பமான பொது கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர் இஸ்மத் வரவேற்புரை நிகழ்த்த செயலாளர் அம்ஜத் சென்ற வருட பொதுகூட்ட அறிக்கையை வாசிக்க, தலைவர் உரையை சகோ. ஜஹான்கீர் நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின் விஷேட அதிதியாக இலங்கை அனைத்து சம்மேளன தலைவர் (FSMA – President) ஹாஸிம் ஹம்ஸா கலந்து சிறப்பித்திருந்தார்.

புத்தளத்தில் தேவையுடையோர், PAQன் வகிபாகம் தொடர்பிலான உணர்வுகளை தூண்டும் விதமான ‘ஸ்டோரி டெல்லிங்’ னை (ஒரு கதை சொல்வோம்) சகோ. தஸ்னீம் மிகவும் அழகாக நெறிப்படுத்தினார். வருடாந்த செயற்றிட்டங்களின் தொகுப்பை அமைப்பின் பொருளாளர் ரிப்கான் நிகழ்த்தினார். பாடசாலை அதிபர்கள், ஊரின் பிரமுகர்கள் உள்ளிட்டோர் PAQ தொடர்பில் வெளியிட்ட கருத்துரைகள் வீடியோ தொகுப்பாக வெளியிடப்பட்டது. நிறைவில் இந்நிகழ்வின் பிரதான கருபொருளான “புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு” சகோ. மபாஸின் நெறியாள்கையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இறுதியில் அஷேய்க் ஏ.கே.எம். முஹம்மத் (ரஹ்மானி) அவர்களினால் சொற்பொழிவு ஒன்று நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் கத்தார் இலங்கை ‘கொமுனிட்டி’ உதைபந்தாட்ட அணியில் புத்தளத்தை பிரதிநித்துவப்படுத்திய சகோ. முஸ்தகீம், சகோ. ஹம்தியாஸ் ஆகியோருக்கும், நீண்டகாலம் PAQ நிர்வாக உறுப்பினராக இருந்து தன்னால் ஆன பங்களிப்பை வழங்கி நாட்டிற்கு செல்லும் சகோ. ஆதில், சகோ. பைசல் ஆகியோருக்கும் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கபட்டது.

சகோ. அசார்தீன் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவு பெற்றது. கத்தார் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்து இந்நிகழ்வினை மிகவும் சிறப்பாக்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் PAQ தனது மனதார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதோடு வருகை தந்தவர்களுக்கு குழுக்கள் முறையில் பரிசுகளும் வழங்கப்பட்டது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All