Puttalam Online
regional-news

2019/2020ம் ஆண்டுக்கான PAQ அமைப்பின் நிர்வாகக்குழு தெரிவானது

  • 15 April 2019
  • 276 views

(PAQ Media Unit)

கத்தார் வாழ் புத்தளம் சகோதரர்களின் கூட்டமைப்பின் ஏழாவது பொதுக்கூட்டம் அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய நிர்வாக கூட்டம் கடந்த வியாழக்கிழமை வழமைக்கு மாறாக ‘சீ லைன்’ கடற்கரை கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டு தலைவராக சகோ. அம்ஜத் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக சகோ. நுஸ்ரி, பொருளாளராக சகோ. சப்ரீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இம்முதல் நிர்வாக கூட்டத்தை சகோ. மபாஸ், ஹில்பி மற்றும் ரிபாஹ் ஆகியோர் நெறிப்படுத்தினர். புதிதாக உள்வாங்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அமைப்பின் நிர்வாக கட்டமைப்பு, அதன் செயல்படுத்தும் முறை தொடர்பில் விரிவாக விளக்கப்படுத்தப்பட்டதுடன், உத்தேச செயற்றிட்டங்கள் எடுக்கப்பட்டு, வந்திருந்த நிர்வாக குழு உறுப்பினர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும் அனைவரும் மத்தியிலும் பகிரப்பட்டது.

அதேநேரம் ஏனைய அங்கத்தவர்களின் பொறுப்புக்களும், கடமைகளும் அமைப்பின் அடுத்த மாதாந்த கூட்டத்தின் போது தெரிவு செய்யப்படவிருக்கிறது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

Kappaladi

  • Thursday,18 Apr 2019
சுவடிக்கூடம்View All