Puttalam Online
regional-news

புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் இந்தியா விஜயம்

  • 16 April 2019
  • 474 views

நகர்ப்புற பின்னடைவு மற்றும் தழுவலின் 4 வது ஆசிய பசிபிக் மன்றம் (The 4th Asia-Pacific forum on urban resilience and adaptation) ஏப்ரல் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் இந்திய தலை நகர் டெல்லியில் நடைபெற்று வருகின்றது.

இம்மாநாட்டில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்கள் கலந்துகொண்டார்.

உலகில் அடிக்கடி ஏற்பட்டு வருகின்ற பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நமது நகரங்ளை ஈடுகொடுக்கும் நோக்கில் இம்மாநாடு கடந்த பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்றது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபை உட்பட வளர்ந்த நாடுகளும் உதவி புரிந்து வருகின்றன.

இந்தியாவின் துனை ஜனாதிபதி அதிமேதகு. வெங்கையா நாயுடு அவர்களின் தலைமையில் நடைபெறுகின்ற இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் வலயத்திலிருந்து சுமார் 80 மேயர்கள் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து 4 மேயர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

WAK


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All