Puttalam Online
current

எமது புத்தளத்தின் சைக்கிள் சாதனையாளர்களை கௌரவிக்க கொழும்பு முகத்திடலில் ஒன்று திரள்வோம்..!

  • 18 April 2019
  • 301 views

புத்தளத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு இளைஞர்கள் *(Samih & Nabeeh)* கடந்த புதன்கிழமையன்று மாலை 5.30 மணிக்கு தாய்நாட்டை ஒருமுறை சுற்ற வேண்டும், நாட்டின் எழில்கொஞ்சும் இயற்கையின் அழகை இரசிக்க வேண்டும், நாற்புறமும் வீசுகின்ற காற்றை சுவைக்க வேண்டும், தாய்நாட்டின் பரப்பை ஒரே பார்வையில் அறிய வேண்டும், உலகத்தில் சவால்களை தாண்டி நம்மால் பயணிக்க முடியும் என்றதொரு உயரிய இலக்கை அடிப்படையாகக்கொண்டு எமது நகரத்திலிருந்து புரப்பட்டு கொழும்பு ஊடாக தென்மாகாணத்தை அடைந்து, மொணராகலை ஊடாக கிழக்கை அடைந்து, முல்லைத்தீவு ஊடாக யாழ் மாநகரை அடைந்து வில்பத்து வனப்பகுதி ஊடாக புத்தளம் வந்து, கடல்வழியாக கல்பிட்டி சென்று அங்கிருந்து புத்தளத்தை இன்று (18/04/2019) மாலை அடைய உள்ளனர், இன்ஷா அல்லாஹ்.
இவர்கள் இருவரதும் பல வருட கனவை அடைவதற்கு இன்னும் ஒரிரு மணித்தியாலங்களே உள்ளன. *அந்த இலக்கை அடைய இறைவன் துணை நிற்பான்.*

இப்படிப்பட்ட சாதனையாளர்களின் முயற்சிகளை நாம் *ஊக்குவிக்க வேண்டும்*, எதிர்கால இளைஞர்கள் இப்படிப்பட்ட துறைகளில் இன்னுமின்னும் *மிளிர வேண்டும்* என்ற நோக்கோடு இவர்களை *ஊக்கப்படுத்தி வரவேற்று கௌரவப்படுத்தும்* ஏற்பாடொன்று சங்கங்கள், அமைப்புக்கள், இயக்கங்கள் இன்னும் பல தனிமனிதர்களின் பங்குபற்றுதலுடன் இன்ஷா அல்லாஹ் *இன்று (18/04/2019)* நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

வரவேற்பு ஆரம்பிக்குமிடம் – *தில்லையடி ஜும்ஆ பள்ளி* வாயலுக்கு முன்னால்

கௌரவிக்கும் இடம் – *கொழும்பு முகத்திடல்*
நேரம் – *மஃரிப் தொழுகைக்கு பள்ளிக்கு வரவும்*

குறிப்பு –

1. வருகை தருபவர்கள் அனைவரும் உரிய இடத்திற்கு வருகை தரவும். வீதிகளில் ஆங்காங்கே இருமருங்கிலும் நிற்பது தவிர்க்கப்பட வேண்டும்.
2. நலன்விரும்பிகள் தனவந்தர்கள் யாராவது இச்சாதனையாளர்களை சந்தோஷப்படுத்தி பரிசில்கள் வழங்க விரும்பினால் மட்டும் *கொழும்பு முகத்திடலில்* வந்து நிற்கவும்.
3. நீங்களும் உங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து அவர்களையும் ஊக்கப்படுத்துமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
ஏற்பாட்டுக்குழு.
#PuttalamCyclist #PuttalamCan


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All