Puttalam Online
current

கொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு

  • 21 April 2019
  • 213 views

கொழும்பு  உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டுவெடிப்பு

கொழும்பு உட்பட மட்டக்களப்பு, நீர்கொழும்பு, போன்ற நகரங்களில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இன்று (21) பதிவாகின. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் உட்பட நீர்கொழும்பு மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களிலும், கொழும்பு ஷன்க்ரீலா,  சினமன்  க்ராண்ட், கிங்ஸ்பெரி, (Hotel Shangri La, Cinnamon Grand and Kingsbury hotel) ஆகிய இடங்களிலும் காலைவேளை   குண்டுகள் வெடித்துள்ளன.  முதல் குண்டுவெடிப்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது. இவை தற்கொலை தாக்குதலெனவும் ஒரே குழுவினராலேயே செய்யப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது

மட்டக்களப்பு சம்பவத்தில் சுமார் 28 பேர் பலியாகியதுடன் மொத்தம் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் 250 க்கும் மேற்பட்டோர்  பலியாகினர். இவர்களில் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் அடங்குவர். இவர்கள் இந்தியா, பெல்ஜியம், சீனா,அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற  நாடுகளை சேர்ந்தோராவர். 500 பேர் வரை காயமுற்றனர்.

கொழும்பு ஷங்கரில்ல குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது அங்கிருந்த பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது. சம்பவம் இடம்பெற சில நிமிடங்களுக்கு முன்னரே குடும்பத்துடனான புகைப்படம் ஒன்று  சமூக வலைத்தளம் ஒன்றில்  பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மாலை 2.00 மணியளவில் தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில்  இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இரண்டுபேர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாளிகாவத்த பகுதியிலும் ஒருசில குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மூன்று பொலிஸ் அதிகாரிகள் பலியாகியுள்ளனர். குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளுக்கு இப்பகுதிக்கு அதிகாரிகள் சென்றபோதே இங்கு குண்டு வெடித்துள்ளது. தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வெள்ளவத்தையில் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டு ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பாணந்துறை கேசல்வத்த பகுதியில் தாக்குதல்தாரிகள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் வீடுஒன்றும்  சோதனையிடப்பட்டது. விசாரணைகளும் கைதுகளும் தொடர்கின்றன.

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொலிஸாரினதும் படையினரதும்  லீவுகள் ரத்து செய்யப்பட்டன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் தவிர்த்த ஏனையோர் அனுமதிக்கப்படவில்லை. இதேவேளை நாளையும் (22) நாளை மறுநாளும் (23)  நாட்டின் சகல அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக இரத்த வங்கியின் கையிருப்பில் உள்ள இரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன்காரணமாக இரத்த தானம் செய்ய விரும்புவர்கள் முன் வருமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அதிகமானோர் இரத்த தானம் செய்ய முன்வந்ததனால் தேவையானபோது மீண்டும் கோருவதாக அறிவிக்கப்பட்டது.

குண்டு வெடிப்பு தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் பதட்டமடையவேண்டாமெனவும் குண்டுவெடிப்புக்கான காரணிகளை  கண்டறிவதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள்  தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை தெரிவிக்கையில் யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். வீண் வதந்திகளை பரப்பவேண்டாமெனவும் அவற்றை நம்பவேண்டாமெனவும் பொதுமக்கள் கேட்கப்படுகின்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து வீணான வதந்திகள் பரவாமலிருத்தல் போன்ற நோக்கங்கள் கருதி WhatsApp , Viber, Face book போன்ற சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

நாட்டில் நிலவும் அச்சமான சூழ்நிலை தொடர்பில் விவாதிப்பதற்கான விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றபொது (23) குண்டு வெடிப்பு சம்பவமானது இஸ்லாமிய பிரிவினைவாத குழுவான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன பாராளுமன்ற அமர்வின்போது (23) தெரிவித்தார். நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் இரு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பதில் தாக்குதலாக இது இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் நகரில் உள்ள இரு பள்ளிவாசல்களில் பிரென்டன் டர்ரன்ட் என்ற துப்பாக்கிதாரி பள்ளிவாசலில் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டில் 50 பேர் கொல்லப்பட்டமை அறிந்ததே.

 

கண்டனங்கள் 

Twitter Massages:

Ranil Wikramasinghe:

I strongly condemn the cowardly attacks on our people today. I call upon all Sri Lankans during this tragic time to remain united and strong. Please avoid propagating unverified reports and speculation. The government is taking immediate steps to contain this situation.

R. Sampanthan:

I am deeply saddened by today’s cowardly attacks targeting Churches and Hotels in Colombo and Batticaloa. I urge His Excellency the President and The Prime Minister to take necessary steps to identify the preparators of these crimes and to bring them before the law.

Mahinda Rajapaksa:

We will not tolerate such violence, such acts of terrorism, of cowardice within our borders once again. We will stand together and rise up against it as one voice. We will stand united as a nation.

உலக நாடுகள் கண்டனம் 

அமெ­ரிக்கா 

அமெ­ரிக்க ஜனா­தி­பதி  டொனல்ட் ட்ரம்ப்   தனது டுவிட்டர் செய்தியில்

இலங்­கையின் தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களில்  இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களில் 138 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.  600 க்கும் மேற்­பட்டோர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளனர்.    இலங்கை மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா  தனது ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்­றது. நாம் இலங்­கைக்கு   உத­வு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.

பிரித்­தா­னியா 

பிரித்­தா­னிய பிர­தமர் தெரேசா மே தனது டுவிட்டர் பக்­கத்தில் …

இலங்­கை­யி­லுள்ள தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­க­ளுக்கு எதி­ரான வன்­முறைகைகள் பயங்­க­ர­மா­னவை. இந்த துய­ர­மான நேரத்தில் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்கும் ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துக்­கொள்கின்றேன். இந்­நே­ரத்தில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நம்­பிக்­கையை இழக்­காமல் செயற்­ப­ட­வேண்­டும்.

இந்­தியா 

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி  தனது டுவிட்டர் தளத்தில் தெரி­வித்­துள்­ள­தா­வது

’இலங்­கையில் நிகழ்ந்த இந்த கொடூ­ர­மான சம்­ப­வத்­துக்கு கடு­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்துக் கொள்­கிறேன். இதைப்­போன்ற காட்­டு­மி­ராண்­டித்­த­னத்­துக்கு நமது பிராந்­தி­யத்தில் இட­மில்லை.

துய­ர­மான இந்த வேளையில் இலங்கை மக்­க­ளுடன் இந்­தியா துணை­யாக நிற்கும். இன்­றைய தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தா­ருக்கு ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்துக் கொள்­வ­துடன், காய­ம­டைந்­த­வர்கள் விரைவில் குண­ம­டைய பிரார்த்­திக்­கிறேன்.

பாகிஸ்தான் 

பாகிஸ்தான் பிர­தமர்   இம்ரான்கான்

ஈஸ்டர் தினத்­தன்று நடத்­தப்­பட்ட இந்த கொடூ­ர­மான தீவி­ர­வாத தாக்­கு­தல்­க­ளுக்கு கடும் கண்­ட­னத்தை தெரி­வித்து கொள்­கிறேன். உயி­ரி­ழந்­த­வர்­களின் குடும்­பத்­தி­ன­ருக்கு எனது ஆழ்ந்த இரங்­கல்கள்.

துருக்கி 

இந்தத் தாக்­கு­த­லா­னது மனி­த­கு­லத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல். துருக்­கிய மக்கள் சார்­பாக பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கும் இலங்கை மக்­க­ளுக்கும் எனது ஆழ்ந்த அனு­தா­பங்­கள்.

இஸ்ரேல் பிர­தமர்

இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு

இலங்­கையில் இடம்­பெற்ற குண்­டுத்­தாக்­கு­தலை அறிந்து கடும் அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக தெரி­வித்­துள்ள இஸ்ரேல் நெருக்­க­டி­யான இந்த நேரத்தில் இலங்­கைக்கு உத­வி­களை மேற்­கொள்ள நாம் தயா­ராக இருக்­கிறோம் எனவும்  பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்­றி­னைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விளா­டிமிர் புடின் ரஷ்ய ஜனாதிபதி 

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதலானது கொடூரத்தனமானது. இலங்கையருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.  இலங்கையுடன் இணைந்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக போரடவும் நாம் தயார்.

 

FROM RUETERS:

POPE FRANCIS

“I learned with sadness and pain of the news of the grave attacks, that precisely today, Easter, brought mourning and pain to churches and other places where people were gathered in Sri Lanka,” he told tens of thousands of people in St. Peter’s Square to hear his Easter Sunday message.

“I wish to express my affectionate closeness to the Christian community, hit while it was gathered in prayer, and to all the victims of such cruel violence.”

WORLD JEWISH CONGRESS PRESIDENT RONALD S. LAUDER

“World Jewry – in fact all civilized people – denounce this heinous outrage and appeal for zero tolerance of those who use terror to advance their objectives. This truly barbarous assault on peaceful worshippers on one of the holiest days in the Christian calendar serves as a painful reminder that the war against terror must be at the top of the international agenda and pursued relentlessly,” he said in a statement.

 

U.S. PRESIDENT DONALD TRUMP

“The United States offers heartfelt condolences to the great people of Sri Lanka. We stand ready to help!,” he tweeted.

INDIAN PRIME MINISTER NARENDRA MODI

“Strongly condemn the horrific blasts in Sri Lanka. There is no place for such barbarism in our region. India stands in solidarity with the people of Sri Lanka. My thoughts are with the bereaved families and prayers with the injured,” he said on Twitter.

GERMAN CHANCELLOR ANGELA MERKEL

“It is shocking that people who had gathered to celebrate Easter were the deliberate target of vicious attacks,” she wrote in a letter of condolence to Sri Lanka’s president.

 

FRENCH PRESIDENT EMMANUEL MACRON

“Deep sorrow following the terrorist attacks against churches and hotels in Sri Lanka. We firmly condemn these heinous acts. All our solidarity with the people of Sri Lanka and our thoughts go out to all victims’ relatives on this Easter Day,” he said on Twitter.

BRITISH PRIME MINISTER THERESA MAY

“The acts of violence against churches and hotels in Sri Lanka are truly appalling, and my deepest sympathies go out to all of those affected at this tragic time. We must stand together to make sure that no one should ever have to practise their faith in fear,” she tweeted.

SPANISH PRIME MINISTER PEDRO SANCHEZ

“Terror and barbarity will never defeat us,” he wrote on Twitter.

LUXEMBOURG PREMIER XAVIER BETTEL

“Even on Easter Sunday, there are those who sow hatred and reap death. The attacks in Sri Lanka churches testify to a real genocide perpetrated against Christians. Let us pray for the innocent victims and work towards religious freedom around the world,” he said on Twitter.

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All