Puttalam Online
current

புத்தளத்தில் துக்கதினம்

கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து குழந்தைகள் உட்பட  300 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தமை அறிந்ததே. தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டோருக்கு அஞ்சலி செலுத்தும்  வகையிலும் தாக்குதலைக் கண்டித்தும் இன்றையதினம் 23 ஆம் திகதியை தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இன்று காலை 8.30 மணியிலிருந்து 8.33 வரையான 3 நிமிட நேரம் நாடளவிடரீதியில் அனைத்து மக்களும் இணைந்து மரணித்தோருக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

புத்தளம், கொழும்பு முகத்திடலில் நமது நாட்டின் தேசியக் கொடி அரைக்கப்பதில் பறக்கவிடப்பட்டுள்ளது. எமது கனத்த ஈரமான இதயங்களைத் தாங்கி அது மெளனித்து நிற்கின்றது.  புத்தளம் நகரில் அணைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் வெள்ளைக்கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.  

 

நகரின் சுற்றுவட்டங்களில் வெண்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் அஞ்சலிப்பதாகைகளை  காட்சிப்படுத்தியுள்ளமையையும் காணக்கூடியதாகவுள்ளது. புத்தளம் பெரியபள்ளிவாசலின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வாகனங்கள் உட்பட வண்டிகள் வெண்கொடிகளைத் தாங்கி பயணிக்கின்றன.

புத்தளம் ஒன்லைனும் இத்துக்க நிகழ்வில் ஒன்றித்துப் பங்கேற்கின்றது. 



One thought on “புத்தளத்தில் துக்கதினம்

  1. Ah malliha says:

    இவ்வாறான ஈனச்செயல் புரிகின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All