Puttalam Online
current

புத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்

  • 25 April 2019
  • 450 views

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

பொது மக்களுகான அவசர வேண்டுகோள்

எமது நாட்டின் பல்வேறு பொது இடங்களிலும் மதஸ்தானங்களிலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள மிலேச்சத்தனமான குண்டுவெடிப்புகளை புத்தளம் மக்கள் சார்பாக புத்தளம் பெரிய பள்ளி வன்மையாக கண்டிக்கின்றது.

எனவே புத்தளம் மக்களாகிய நாம் மிக அவதானத்துடன்   செயற்படுவதோடு பின்வரும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயற்படுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

  1. எமது பிரதேச பள்ளிவாயல்கள், கிராமங்கள் தொடர்பில் அந்தந்த மஹல்லாவாசிகள், பள்ளி நிர்வாகிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் செயற்படுதல். (விஷேடமாக இரவு வேளைகளில் பாதுகாப்பை பலப்படுத்தல்)
  2. இந்நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளோரை இனங்காண பாதுகாப்பு தரப்புகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குதல்.
  3. ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீதிகளிலும் தெருவோரங்களிலும் ஒன்று கூடுவதையும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வெளியில் நடமாடுவதையும் முற்றாக தவிர்ந்துகொள்ளுதல்.
  4. பள்ளிவாயல்களுக்கு வருகை தருவோரின் பொதிகள் மற்றும் கைப்பைகள் தொடர்பில் மிக அவதானத்தோடு பள்ளி நிர்வாகிகள், பணி புரிவோர் செயற்படுதல்.
  5. மனவேதனை அடைந்துள்ள சகோதர சமுக மக்கள் மதத்தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதோடு முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.
  6. தற்போது நாட்டின் சட்டங்கள் கடுமையக்கப்பட்டுள்ளதால் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கில்களில் பயணித்தல் உட்பட அனைத்து சட்டத்துக்கு முரணான விடயங்களிலிருந்தும் இளைஞர்கள் உட்பட அனைவரும் முற்றாக தவிர்ந்து நடத்தல்.
  7. தங்களது பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுமாயின் உடனடியாக பொலிஸாருக்கு அல்லது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்போருக்கு அறிவித்தல்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All