Puttalam Online
current

புத்தளம் நகரில் சில பள்ளிகளில் ஜும்ஆ இல்லை

  • 26 April 2019
  • 545 views

புத்தளம் நகரின் சில பள்ளிவாசல்களிலும்  புறநகர்களிலும்  இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ நடைபெறாது என புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்பிரகாரசம் புத்தளம் நகரில் பெரியபள்ளி, பகாபள்ளி, நாகூர் பள்ளி என்பவற்றிலும் புறநகர் பகுதிகளான  தில்லையடி ஜும்ஆ பள்ளி, அனுராதபுர வீதியில் முல்லைநகர் ஜும்ஆ பள்ளி என்பனவற்றிலும் ஜும்ஆ நடைபெறாது.   மன்னார்  வீதி நான்காம் கட்டையில் அமைந்துள்ள வேப்பமடு கிராம  ஜூம்ஆ பள்ளியிலும் இன்றயதினம் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ இடம்பெறாது எனவும்  தெரியவருகின்றது.

புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம் இன்றையதினத்தில் ஜூம்ஆவை நடத்துவதில்லை என இன்று தீர்மானம் எடுத்ததையடுத்து வேறு பள்ளிவாசல்களும் பெரியபள்ளியுடன் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தி இம்முடிவுக்கு வந்துள்ளன. நகரின் வேறுசில பள்ளியவாசல்கள் இதுதொடர்பான ஆலோசைகளில் ஈடுபடுவதாகவும் பெரியபள்ளி நிருவாகம் puttalamonline இணையத்தளத்துக்கு அறிவித்துள்ளது.

இன்றைய  தினம் லுஹர்  நேரத்துக்கு முன்னர் புத்தளம் பெரிய பள்ளிக்குள்  பிரவேசிப்பது முற்றாக்கத் தடை செய்யப்பட்டிருப்பதாக பெரியபள்ளியின் நிர்வாகக் குழு செயலாளர் JZM நாசிக்  puttalamonline அறிவித்துள்ளார். இதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துவதாகவும், அனைவரினதும் நன்மை கருதி பொதுமக்கள் இம்முடிவுகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All