Puttalam Online
current

இன்று புத்தளம் மக்கள் ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர்

  • 26 April 2019
  • 306 views

இன்று (26.04.2019) வெள்ளிக்கிழமை புத்தளத்தில்  அமைந்துள்ள ஜும்ஆ பள்ளிகளுக்கு கொத்பாப் பிரசங்கங்களை நடத்துவதற்கு பூரணபாதுகாப்பு  தருவதாக பாதுகாப்புப் படையினர் உறுதியளித்திருந்த நிலையிலும் புத்தளம் முஸ்லிம்கள் தமது பள்ளிவாசல்களில் குத்பாதொழுகையை  தவிர்த்திருந்தனர்.

சகோதர இன  கத்தோலிக்க மக்கள் புனித உயிர்த்த ஞாயிறு  தினத்தில்  தமது வழிபாட்டுத் தளங்களில் சமய நிகழ்வுகளை அமைதியாக மேறகொண்டிருந்த வேளை  இடம்பெற்ற மூர்கத்தனமான கொடிய தாக்குதலைக் கண்டித்தும், துயருற்றிருக்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் முழு நாட்டு மக்களுக்கும் தமது கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்தும், இந்த பயங்கரவாத செயலை நம்நாட்டிலிருந்து அடியோடு இல்லாதொழிப்பதற்கு தமது உறுதியையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தியே புத்தளம் மக்கள் தமது​ கொத்பா நிகழ்வுகளை தவிர்த்திருந்தனர்.

ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசணையின் பேரிலேயே புத்தளம் மக்கள் இவ்வாறு ஜும்ஆ தொழுகை மற்றும் கொத்பா பிரசங்கத்தினை நிறுத்திக் கொண்டனர் என புத்தளம்மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும் சர்வ சமய குழுவின் செயலாளருமான அஷ்ஷெய்ஹ் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All