நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து சிங்கள தமிழ் பாடாசாலைகளை இரண்டாம் தவணைக்காக தொடங்கும் திகதிகளில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புக்களை எதிர்வரும் 13 ஆம் திகதியும், தரம் 6 முதல் 12 வரையான வகுப்புக்களை திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கட்கிழமை ஆறாம் திகதியும் ஆரம்பிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை பாடசாலைகளுக்கு விஷேட பாதுகாப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.