Puttalam Online
historical-notes

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 01

  • 9 May 2019
  • 174 views

புத்தளம் பிரதேசத்து ஆபரணங்கள் – 01

புத்தளம் பகுதியில் தொன்றுதொட்டு புழக்கத்தில் இருந்துவந்த ஆபரணகள் பல உள்ளன. பொதுவாக இவை தென்னிந்திய முஸ்லிம்களின் ஆபரணங்களை அடியொட்டியும் சில தமிழர் ஆபரணங்களுடன் தொடர்புபட்டனவாகவும் அமைந்ததை காணலாம். இவற்றில் பெரும்பாலானவை தங்கத்தினாலன்றி பொன்னினாலும் வெள்ளியினாலும் ஆக்கப்பட்டவையாகும்.

பெருநாள் காலங்களிலும் குடும்பத்தில் இடம்பெறும் கலியாணம், காதுகுத்து, சுன்னத்து சடங்கு போன்ற விஷேட தினங்களிலும், கூடு எடுத்தல் போன்ற ஊருக்குரிய விழாக்காலங்களிலும் பொன் ஆபரணங்களை பொற்கொல்லர்களிடம் கொடுத்து மினுக்கி எடுப்பது வழக்காயிருந்தது. இதை ‘பழுப்பில் போடல்’ (பழுக்கச் சுடுதல்) என்று கூறுவர்.

ஆபரணங்களை செய்வதற்கு உள்ளூர் பொற்கொல்லர் பலர் இருந்தனர். அவர்கள் குலத்தொழிலாக அன்றி ஊதியம் தேடும் தொழிலாகக் கற்று பொற்கொல்லர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்த பொற்கொல்லர்களிடம் தொழில்நுட்பங்களை கற்றனர்.

நன்றி: புத்தளம் வரலாறும் மரபுகளும்  –  ஏ என் எம் ஷாஜஹான்

இன்னும் வரும் …


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

ரகசியங்கள்…!

  • Thursday,24 Oct 2019
சுவடிக்கூடம்View All