மாணவர்களின் வரவு வீதம் குறைவடையும் பட்சத்தில்  தவணை பரீட்சைகள் க.பொ.த சாதாரணதர,  உயர்தர பரீட்சைகள்போன்றன பாதிக்கப்படலாம். ஆகவே நாளை முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எக் காரணம் கொண்டும் இரண்டாம் தவணை பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இவை தொடர்பார்பான தீர்மானங்கள் நாளை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது பாடசாலைகளுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,