Puttalam Online
uncategorized

முகம்மூடிச் சென்றவர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டார்

  • 20 May 2019
  • 846 views

கல்பிட்டியை சேர்ந்த சகோதரி ஒருவர் முகம் மூடி சென்ற காரணத்திற்காக, சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (17/05/2019) அன்று நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளார்.
மேலதிக நீதவான், அவரை 07 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கும் படி பணித்துள்ளார்.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட அவர் மீது ஒரு வேளை, INTERNATIONAL COVENANT ON CIVIL AND POLITICAL RIGHTS (ICCPR) அல்லது Prevention of Terrorism Act (PTA) கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பின் அவரை அடுத்த கிழமையாவது பிணை எடுப்பது சாத்தியமில்லாது போகலாம். இதன்படி, மேல் நீதிமன்றிலேயே பிணை வழங்கப்படக்கூடியதாய் இருக்கும். ஒரு கொலையாளியை பிணை எடுப்பதற்குரிய முயற்சிகளை ஒத்தது இது.

ஆக, நாட்டின் சட்டம் என்பதை மதிக்க வேண்டிய தார்மீக பொறுப்புடையவர்களாக நாம் இருக்க வேண்டியுள்ளது. தலைமைக்கு கட்டுப்படுதல் என்பதை கருத்திற் கொண்டு சகோதரிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

காலம் காலமாய் ஒரு வரையறைக்குள் வாழும் சகோதரிகளுக்கு இது இலேசாக எடுத்துக்கொள்ளும் விடயமல்ல. முகம் மூடுதலை இலேசாக புறந்தள்ளி விட முடியாத இக்கட்டான நிலையினை எல்லாராலும் புரிந்துகொள்ள முடியும். இருந்தும், சிறை செல்லல் என்பது மிக பாரதூரமான விடயம். இங்கு, மஹரம் பேணல், முகம் மூடலை விட எவ்வளவு முக்கியம் என்பதும் சிறை வாழ்க்கை என்பது எந்தளவு பாரதூரம் என்பதும் ஒவ்வொரு உள்ளமும் அறிந்த உண்மை.

இது தொடர்பாக பெண்கள், அவர்கள் பாதுகாவலர்கள் அறிந்திருப்பது மிக முக்கியம் என்பதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் எம் சகோதரிகளை பாதுகாக்கும் எண்ணத்தில் இது சகலருடனும் பகிரப்படுகின்றது.

சட்டத்தரணி நதீஹா அப்பாஸ்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post

  • Friday,6 Sep 2019
சுவடிக்கூடம்View All