Puttalam Online
education

சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு

  • 21 May 2019
  • 89 views

2019 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை  எதிர்வரும் 31 ஆம் திகதி வரைநீடிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச ஊழியர்கள், தங்களின் விண்ணப்பங்களை கிராம உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்த இயலாத பட்சத்தில், தங்களின் நிறுவனத் தலைவரிடம் உறுதி செய்ய முடியும் எனவும்  பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார். இது  தொடர்பான மேலதிக விபரங்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் மூலமோ அல்லது 011 2 784 208 , 011 2 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமோ  அறிந்துகொள்ள முடியும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CAPTCHA Image

*

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Recent Post
சுவடிக்கூடம்View All